கேது ஒரு ஆன்மீக கிரகமாக இருப்பதால் இயற்கையாகவே இவர்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகம் இருக்கும். சில சமயம் தங்கள் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு அதனால் பெரும் துன்பங்களை சந்திக்க வைப்பதும் உண்டு. குடும்ப அமைப்பை பொறுத்தவரை உண்மையாக நேசிப்பவர்கள். சிக்கனவாதிகள். தாம்பூலப் பிரியர்கள். இடுப்பில் மச்சமிருக்கும். பொதுவாக சுறுசுறுப்பு குறைவாக இருக்கும்.
நட்சத்திர அதிதேவதை – சரஸ்வதி
பரிகார தெய்வம் – விநாயகர்
நட்சத்திர கணம் (குணம்)- தேவகணம்
விருச்சம் – எட்டி (பாலில்லா மரம்)
மிருகம் – ஆண் குதிரை
பட்சி – ராஜாளி
கோத்திரம் – பரத்துவாசர்
பரணி நட்சத்திரப் பலன்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள். தங்கள் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக வெளியிடும் குணமிக்கவர்கள். மனசாட்சிக்கு விரோதமாக நடக்கமாட்டார்கள்.
பொதுவாக இவர்கள் வாழ்க்கை வாலிபத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். செல்வ செழிப்போடும், சீரும் சிறப்போடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு தொப்புளில் எள் வடிவில் சிறு மச்சமிருக்கும்.
நட்சத்திர அதிதேவதை – துர்க்கை
பரிகார தெய்வம் – துர்க்கை
நட்சத்திர கணம் – மனுஷகணம்
விருட்சம் – நெல்லி (பாலில்லா மரம் )
மிருகம் – ஆண் யானை
பட்சி – காக்கை
கோத்திரம் – விசுவாமித்திரர்
மிருகசீரிஷ நட்சத்திரப் பலன்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம் சார்ந்த கருத்துக்களை அறிந்தவர்கள். உற்சாகமுடையவர்கள். தனச்சேர்க்கை உண்டு. கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சாஸ்திர ஞானம் பெற்றவர்கள்.
தங்கள் கருத்துக்களை உடனடியாக வெளியிட மாட்டார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் பளீர் என்று வரும். ஆணித்தரமாக பேசுவார்கள். வாழ்கையில் உயர்வு உண்டு. சத்யம் தவறாதவர்கள்.
நட்சத்திர அதிதேவதை -: ஈஸ்வரன்
பரிகார தெய்வம் -: முருகன்
நட்சத்திர கணம் -: தேவகணம்
விருட்சம் -: கருங்காலி (பாலில்லா மரம்)
மிருகம் -: சாரை பாம்பு
பட்சி -: கோழி
கோத்திரம் -: அகத்தியர்
- பார்வதி அருண்குமார்