கொழும்பில் இன்று நடைபெற்ற இளைஞர் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாட்டை ஐக்கியப்படுத்தி சகலரும் சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நேரத்தில் சிவாஜிலிங்கம் சாம்பலுக்குள் மறைந்திருக்கும் நெருப்பை தூண்டி சர்வதேசத்திற்கும் புலம்பெயர்ந்தோருக்கும் தேவையான நிலைமையை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
உண்மையிலேயே வடக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமாயின் அந்த மக்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
அதேவேளை பாரிய பொறுப்பை கொண்டுள்ளவர் என்ற முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட வேண்டும்.
தெற்கில் உள்ள தலைவர்களை போல வடக்கில் உள்ள தலைவர்களும் நாட்டுக்கு பாரிய சேவைகளை ஆற்றவேண்டியுள்ளது என சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.