வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் உள்ள தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கின்றார்கள்.
மைதிரிபால சிறீசேனாவிற்கு வால்பிடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் வெளிநாடுகளுக்கு சென்று பணம்திரட்டும் நடவடிக்கையிலும்.
அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களுமாகவே வன்னியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்களே சிந்தியுங்கள் நீங்கள் இதற்காக வாக்களித்தீர்கள் இவர்கள் இப்போது செய்யும் செயலினை எண்ணிப்பாருங்கள்
தமிழர்களின் விடுதலைப்போராட்டம் இதற்காகவா நடந்தது இதற்காகவா முள்ளிவாய்க்கால் வரையும் கொண்டு அரசியல் வழியில் போராடுங்கள் என்று இவர்கள் கையில் தமிழர்களின் போராட்டத்தினை ஒப்படைத்தார்கள்.
அடுத்து வரப்போகும் தேர்தலினை இலக்காக கொண்டு அரசாங்கத்திடம் கோடிக்கணக்கில் பணத்தினை வாங்கிவிட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டிக்கொண்டு வன்னியில் வந்து வீராப்பேச்சு பேசி வாக்குச்சேகரிக்கும் பணிதான் அன்று தொட்டு இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
எதற்கும் வழிப்பாக இருங்கள் அடுத்து வரப்போகும் தேர்தல் சொல்லும் பாடம் என்ன என்பது மக்கள் கைகளில்தான் இருக்கின்றது சிந்தியுங்கள் யோசியுங்கள்,கூட்டமைப்பின் செயற்பாட்டினை எண்ணிப்பாருங்கள்
கூத்தாடிகளுடன் சேர்ந்து மக்களுக்கு என்னதாக செய்தார்கள் என்று எண்ணிப்பாருங்கள் அவர்கள்தான் சொத்து சேத்தார்களே தவிர மக்கள் நாளாந்தம் செத்துக்கொண்டேதான் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் மக்களே!