யாழ்ப்பாணம் பூவன் மீடியா வெளியீட்டில் கனடா வாழ் ஈழத்துக்கவிஞர் திருமதி.பவானி தர்மகுலசிங்கத்தின் எழுத்துருவாக்கத்திலும், இசையமைப்பாளர் பூவன் மதீசனின் இசையமைப்பிலும் உருவான ஆறு பாடல்கள் அடங்கிய கொற்றவை இசை இறுவெட்டு நேற்று [ 09.06.2019 ] யாழ் திவ்யமஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மறைந்தவர்களுக்கான நினைவு கூர்தலுடன் பகிரப்பட்ட மெழுகுதிரி சுவாலையை பிரதம அதிதியானவர் சிறுமி ஒருவரிடம் கையளிக்க , சந்ததிக் கடத்துகையாக நடாத்தப் பட்ட நிகழ்வின் மங்கள ஒளியினை சிறுமி ஏற்றினார்.
இறுவெட்டின் முதல் பிரதியினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் வெளியிட தொழிலதிபர் கிருபாகரன் பெற்றுக் கொண்டார். இறுவெட்டின் ஆய்வுரையினை கு . வீரா நிகழ்த்தினார்,
மேலும் யாழ்.மாநகர முதல்வர். , ஆனோல்ட் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் . கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல் வராஜா கஜேந்திரன் , சட்டத்தரணி மணிவண்ணன் , முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் பொ . ஐங்கரநேசன் , மற்றும் இசை ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு இளைஞ்ர்களால் மேற்றக்கொள்ளப் பட் ட மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப் பட்டு இருந்தது, பார்வையாளர்களை சோர்வு நிலைக்கு தள்ளாமல் இறுவெட்டின் தயாரிப்பு பணியை மிக வெளிப்படையாக கலகலவென்று வெளிப்படுத்தியதுடன் தமிழ் மக்கள் மீதான எண்ணங்களையும் தமிழ் மண்மீதான சிந்தனைகளையும் தாங்கிய பாடல்வரிகளை இசையும் படங்களும் மேலும் கதைகூறும் பாத்திரங்களாக அமைந்துள்ளன. வாள்வெட்டு குழு , கஞ்சா, குழு, என்று இளம் சமூகம் சிதைக்கப் பட்டு வருகின்றது எனக்கூறும் பயனற்ற புத்திசீவிகளின் மத்தியில் இளைஞ்ர்களாலும் சமூக மாற்றம் கருதி கலைப்படைப்புகளின் ஊடாக சாதிக்க முடியும் என்ற தமது நான்கு வருட உழைப்பின் பேறாக தம்மை நிலைநிறுத்தியுள்ளார் இசையமைப்பாளர் மதீசன். தமிழ்த்தாயின் அடையாளமான கொற்றவைத்த தெய்வத்தின் வீரத்தினை ஆடல்வடிவமாக மட்டக்களப்பு விபுலானந்தா இசைநடனக் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது
[ யாழ்.தர்மினி பத்மநாதன் ]