முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் கொடூரத்தினால் தனது ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பமாக புஸ்பநாதன் இந்திராணி குடும்பம் காணப்படுகின்றது.
1998 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 10 ஆம் திகதி ஸ்ரீலங்காப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதலின்A போது தனது நான்கு பிள்ளைகளை பறிகொடுத்துள்ளார்கள்
அன்று காலை வேளை மூன்று பக்கங்களிலும் இருந்து எறிகணைத்தாக்குதல்களும் அதாவது மண்கிண்டிமலை,அம்பகாம்,ஆனையிறவு போன்ற பகுதிகளில் இருந்து ஸ்ரீலங்காப்படையினரின் எறிகணைகள் சுதந்திரபுரம் பகுதியில் வீழ்ந்து வெடிக்கத்தொடக்கின அதேவேளை விமானங்களும் குண்டு மழை பொழிந்தன இந்த எறிகணைகள் நாங்கள் இருந்த வீட்க்கொட்டில்மீது வீழ்ந்து வெடித்ததுள்ளது
அப்போது எனது பிள்ளைகள் அனைவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டேன் நான் ஒடிவந்து பார்க்கும் போது எனது மனைவி பதைபதைத்து என் செய்வது என்று தெரியாத நிலையில் தலையில் அடித்து குளறியவாறு இருந்தார் என்று அன்று 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரபுரம் படுககொலை தொடர்பில் அதில் தனது நான்கு பிள்ளைகளையும் பறிகொடுத்த புஸ்பநாதன் கண்ணீர்மல்ல சாட்சியாக சொல்லி நிக்கின்றார்.
வெள்ளப்பள்ளம் சுதந்திரபுரம் உடையார் கட்டினை சேர்ந்த புஸ்பநாதன் இந்திராணி இணையர்கள் பெற்றநான்கு பிள்ளைகளை பலியெடுத்த சுதந்திரபுரம் படுகொலை தனது ஜந்தாவதாக மூத்த மகனையும் இறுதிப்போரில் காணாமல்போயுள்ளார் என்று சொல்லிநிக்கின்றார்கள்
எனது பிள்ளைகளான சதீஸ்குமார்,சத்தியசீலன்,கலைச் செல்வி,தேவநந்தினி ஆகிய நான்கு பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள்.
அதில் இறந்த எனது பிள்ளைகளை எடுத்து செல்வதற்கு எவரும் இல்லாத நிலையில் அன்று எறிகணைகள் வீழ்ந்து வெடித்த போது ஒருவர் கூடி அந்த இடத்தில் இல்லை எல்லாம் ஓடிவிட்டார்கள்.
எந்த இடத்தினை பார்த்தாலும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாத நிலையில் தவித்து கொண்டிருந்த வேளையில் அன்றைய கிராம சேவையாளர் வந்து ஆறுதல் சொல்லிவிட்டு ஆட்களை கொண்டுவந்து எனது நான்கு பிள்ளைகளையும் அடக்கம் செய்தார்கள் அதில் காயமடைந்த எனது மூத்த மகன் றமேஸ்குமார் பின்னர் சுகமடைந்து 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது காணாமல் போயுள்ளார்
இன்றுவரை அவர் எங்கு இருக்கின்றார் என்பது தொடர்பில் எதுவும் தெரியாத நிலையில் ஜந்து மலையான மலைகளை கொடுத்துவிட்டு இன்று வாழ்ந்து கொண்டிக்கின்றேன் என்றார் சுதந்திரபுரம் படுகொலையின் போது தனது நான்கு பிள்ளைகளை பறிகொடுத்த புஸ்பநாதன் இந்திராணி இன்றும் சாட்சியமாக வாழ்ந்துவருகின்றார்கள்.