வரிசையாக ஏறினோம்
எப்படி வாழப்போகிறோம் என்று
ஏக்கத்தோடு ஏங்கினோம்
முல்லை மணல் பரப்பில்
முழுவதையும் பறிகொடுத்தோம்
தமிழ் என்ற மறக் குணத்தில்
வீரத்தோடு மோதினோம்
உலகம் செய்த துரோகத்தில்
கைதியாக ஏறினோம்
உடமைகள் மட்டுமல்ல
உரிமைகளையும் இழந்தோம்
கடமைகளை மறந்து
தலைமையின்றித் தவிக்கிறோம்
கூட வந்தவர்களை காணாது
இன்னும் தேடுகிறோம்
முட்கம்பி வேலிக்குள் வரிசையே
வாழ்க்கையாக வாடினோம்
மீண்டும் இழந்த காலத்துக்காக
தினம் தினம் தவிக்கிறோம்
மீண்டு விட்டதாக நினைக்கிறோம்
தாழ்ந்து போனதை மறக்கிறோம்
போரை நாமும் வெறுக்கிறோம்
உரிமை வேண்டும் கேட்கிறோம்
வட்டக்கச்சி
வினோத்