இனமது வேறாயினும் -எந்த
இனத்திற்கும் புனிதம் உண்டு
மொழியது ஒன்றாயினும் – பட்ட
வலியென ஒன்றும் உண்டு
வான் பாயும் குளத்தில் எல்லாம்
வரை முறை ஒன்று உண்டு
மீன் பாடும் நாட்டில் எல்லாம்
வலிமைக்கு பேரும் உண்டு
போருக்கு பயந்ததென்றும்
புற முதுகிட்டு போனதென்றும்
வரலாற்றில் ஒன்று இருந்தால்
வன்னி மண் கணை சுமக்கும்
மட்டுநகர் மட்டும் இல்லை
மந்தைகள் போல் உங்கள் எல்லை
ஊர் பிடிக்க எண்ணம் என்றால்
எங்கள் தேர் பிடித்து கொள்ளும்
மதம் மாற்றிக் கரம் பிடிப்பிர்
மதத்தின் பேர்க் கொலைகள் செய்வீர்
ஊர்க் கொல்லை எமதென்பிர்
எம் உணர்வினை என்று கொல்வீர்
வரி கட்டி வரிசையிலே
வர்த்தகம் நாம் செய்ய
வருவீர் நீர் வாகனத்தில்
வந்தவுடன் பொருள் விற்பீர்
நிலை புரியா இழிதமிழன்
வரிசை கட்டி வாங்கிடுவான்
விலை போகா பொருள் எல்லாம்
நீர் கட்டி அனுப்பிடுவீர்
இருநூல் இறுக்கிய பின்
இழுத்து கட்டி விட்டு
இருவர் ஓதிப் பின்
இறுக்கி அறுத்து விட
மாடென்று நினைத்தாயோ
மறத்தமிழன் நாங்களடா
போருக்கு பின் வாங்கா
புலித்தமிழன் தேசமடா……
எரிகிறது தேகம்
எழுதுவேன் இன்னும்
எரித்து உமை அழித்து விடும்
எம் தமிழின் கவித்திறமை
வரை முறை ஒன்று உண்டு
வரம்புகள் மீற வேண்டாம்
எல்லையை நீட்டும் எண்ணம்
இனி மேலும் உமக்கு இருந்தால்
தொல்லைகள் தினம் சூழும்
தொப்பிகள் தினம் வீழும்
வல்ல எம் தமிழ் மீது
வணங்கி உறுதி கொள்வோம்
பயந்த இனம் நாங்கள் அல்ல
பழி தீர்க்கும் குணமும் அல்ல
தொல்லைகள் வேண்டாமே
தூரவாய் போய் விடுங்கள்
பொறுப்பு ஒன்று இருப்பதனால்
பொறுமையாய் என் கவிதை
இருப்பு எம் மண்ணில் என்றால்
நொறுங்கி விடும் உங்கள் தலை
- கவிப்புயல் சரண்.