யாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு யாழ்ப்பாணம் றோட்டரிக் கழகமும் DATA அமைப்பும் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்..” என்னும் தொனிப்பொருளில் பாதிக்கப் பட்டோருக்கும்அவர்களோடு பயணிப்போருக்குமான சுயமதிப்பீட்டு மாநாடு இன்று [14.06.2019 ] காலை 9.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை யாழ்.டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அமைப்புகளையும் இணைத்து DATA இயக்குனர் S. சம்பந்தன் மற்றும் றோட்டரிக் கழக தலைவர் ஆர் .பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் வடக்கு கிழக்கை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள், மனித உரிமை ஆணையம், பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் , பொது அமைப்புக்கள் உட்பட வடக்கு கிழக்கு இணை சார்ந்த 80 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் உட்பட 250 கும் மேற்பட்டோ ர் பங்கேற்றனர்.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ .விக்னேஸ்வரன் மற்றும் அதிதிகளின் மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் குழுநிலைக் கலந்துரையாடல் , பிரகடனம் வாசிப்பு என்பனவும் இடம் பெற்றன.
பண்பாட்டு மலர்ச்சிக்கு கூடத்தின் பறை கொட் டுதலுடனான பாடல் அவையினரை உற்சாகப் படுத்துதலுடன் வெளிப்படையாக விடயங்களை கலந்துரையாடும் களத்தினை பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்தது .
முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் சிறப்புரையினை தொடர்ந்து பாதிக்கப் பட் டோரில் சவால்களை எதிர்கொண்டு சாதிப்போர் சார்பாகவும் , அவர்கள் சாத்தியத்தமை பேசுவதுடன் , பாதிக்கப் பட்டோருடன் பயணிப்போருக்கான அமர்வுகள் கலாநிதி க. சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வில் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜெயகாந்தன்.
சுரேஷ்குமார், சாயிராணி, துஷ்யந்தி , பிரியம தா , மற்றும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் , பாதிக்கப் பட் டோருடன் பயணிப்போர் அரங்கில் வடக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர், மனித உரிமை ஆணையாளர், ஆகியோருடன் , மன்னர் மாட் ட அரச அதிபர் ,மற்றும் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மாவட் ட அரச அதிபர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கு கொண்டனர்,
இங்கு மாற்றுத் திறனாளிகள் , பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த முதியோர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியோரை பிரதி நிதித்துவ படுத்த்ட்டும் வகையில் பங்கு கொண்ட இவர்கள், கை கால் இழந்தவர்கள், கண் பார்வை குறைந்தவர்கள், சக்கர நாற்காலி பாவனையாளர்கள், மனவளர்ச்சி குன்றியோர், கேட் டால் பேச்சு குறைபாடு உடையவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த முதியோர்கள், உழைக்கும் மாற்றுத் திறனாளிகள், பொதுவான மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகள் போன்ற தலைப்பில் குழுக்களாக பிரிக்கப் பட்டு குழுநிலைக் கலந்துரையாடலும் , அவர்களின் பிரச்சனைகள் , சவால்கள், தீர்வுகளுக்கான செயலாற்றுகையும் தொடர்பாடல் நிறுவனங்களை சந்தித்தலும் போன்ற விடயங்கள் கலந்துரையாடப் பட் டன .
இறுதியில் கலந்துரையாடப்பட் ட விடயங்கள் பிரகடனப் படுத்தப் பட்டு வாசிப்பு இடம்பெற்றதுடன் அவை குறித்த அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் பொருட்டு தயார் படுத்தப் பட் டது. மேலும் இக்கலந்துரையாடலில் பொதுப் போக்குவரத்து பிரச்சனைகள் , தொழிலின்மை, வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மலசல கூடம் பொது இடங்களில் இன்மை தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
குறிப்பாக இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசிடம் தான் பொறுப்பு உள்ளது என்றும் , இல்லை மாகாண அரசிடம் தான் பொறுப்பு உள்ளது என்றும் அரச அதிகாரிகளால் கருத்துக்கள் முன்வைக்கப் பட் டதுடன் அவர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து நழுவிக் கொள்ளும் வகையில் அவர்களின் பதில்கள் அமைந்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது, . வரலாற்றில் முதன் முதலாக மாற்றுத் திறனாளிகளுக்கான நடாத்தப் பட் ட இவ் மாநாடு 2009 இன் பின்னான போரின் பாதிப்புக்கள் குறித்த பேசுபொருளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ யாழ்.தர்மினி பத்மநாதன்