அம்பாந்தோட்டை ஐ.எஸ். முகாமென கூறப்படும் பயிற்சி முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 3 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற குறித்த நபரை, காத்தான்குடியில் கடந்த 24ஆம் திகதி கைது செய்ததாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த காவல்துறையினர் , 36 வயதுடைய முஹமது புகாரி முஹமது அஸ்வர் என்பவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை பயிற்சிபெற்ற அம்பாந்தோட்டை முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கு பயிற்சி குறித்த ஒத்திகையிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 3 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.