விடியலை நேசித்து
விடுதலையை
தேடிக்கொண்டிருக்கும்
தமிழர்களின் வாழ்வு,
இன்று ……
ஏதோ ஒரு வகையில்
உடைப்பெடுத்து பெருகும்
சிதிலங்களாகி தம்
வாழ்வியல் உரிமைகளை
இழந்து கொண்டிருக்கின்றது…..!
துரோகம் எனும்
கொடுமையிலும்
விரோதம் எனும்
மாயையிலும்
இன்னும் நாம்
விழிப்படையாமல்
இருப்பது காலப்பில்லையா
அல்லது காரண பிழையா
என்பதை அறிய
அறியமுடியவில்லை ……….!
மரண பயத்தை
கண்முன்
கண்டும் அவய
சிதைவுகளின்
பாயில் கிடந்தும்
ஆற்றமுடியாத
அவலச்சுமையை
கூறமுடியாத தமிழினமாய்
உருப்பெற்று நிற்பது
எவ்வளவு வேதனை தெரியுமா……………….1
எதற்காக ………….!
உங்கள் மனங்களை
திறந்து ஒளிபரப்பு
செய்யுங்கள் இல்லையேல்
நிறைவாய் அமைதி கொள்ளுங்கள்,
போட்டு உடைத்து நாசப்படுத்தி விடாதீர்கள்…….!
ஏன் என்றால்
பொறுமை எனும்
பெரும் யாகம்
நமக்கு ஓர்நாள் பலன் அளிக்கும்,
எல்லாம் இழந்தும்
நாம் எம் சொல்லை இழக்கவில்லை
அது வில்லாய் நிமிரும்
அந்நாள் விரைவில் மலரும்,
தேசப்பிரியன்