மழையில் குடிசைத் தூவாரங்களுள்
நனைந்து விறைக்கும்
குழந்தை போலவும்.
தெருவின் விபத்தில் சிதைந்த
நாயில் ஈக்களாகவும்.
சிரம் இழந்த விருட்சம்
போலவும்.
திருவிழா நெரிசலில் தொலைந்து கதறும் குழந்தை
போலவும்.
நீருள் அமிழ்ந்த மழலை
போலவும்.
கரைமணல்த் திடல்த் துடிக்கும்
குற்றுயிர் மீன் நிலை
போலவும்.
அணைந்து சரிந்த
மெளுகைப் போலவும்.
ஊதி வெடிக்கும்
பலூன் போலவும்.
கை விடப்பட்ட தெருவோர
சிசுவின் வீரிடலாகவும்.
விபத்தில் தனித்த
முண்டம் போலவும்.
விழிப் பார்வையற்று
முட்களிடை
வழி தேடுவதாயும்.
நீச்சல் தெரியாது
சமுத்திரத்துள் போலும்.
குஞ்சுகளை இழந்த
தாய்க் குருவி போலவும்.
சுடுதரையில் எறும்பு
போலவும்.
கொதீ நீரில்
அமிழ்ந்த உயிர் நிலையாயும்.
பனிப்பாறைகள் நடுவே
உடுதுணியற்றும்.
மழையற்ற தரிசாகவும்.
நீரற்ற பாலைவனத்து
பயணத் துடிப்பாகவும்.
திசையறியா வனத்துள்
அகப்பட்டது போலவும்.
குற்றுயிர் நிலையில்
தசை குதறும்
பிணந் தின்னும் கழுகுகளிடம்
தேகம் கொடுத்த நிலையாவும்.
ஓநாய் கடிக்கும்
குட்டி ஆடு போலவும்.
ஆனையின் கால்களுள் பிதுங்குவதாகவும்.
சிறைக்கூட நரகமாகவும்.
நலிந்து போகும் தேய்பிறை
போலவும்.
கதற துடிக்கும் கருமேகம்
போலவும்..
என்ன ஒரு கொடுமை இது
நேசத்தைத் தொலைத்து
மனம் தனிமையில் விசும்புகையில்.
சண் ஜீபத்