அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பதிவிலேயே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரங்கள் அனைத்தும் சர்ச்சைக்குரியனவே என்றும் அமைச்சர் மனோ கணேசன் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது, புனர்வாழ்வளித்து விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவை யோசனை ஒன்றை முன்வைக்கவிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையிலேயே, குறித்த அமைச்சரவை பத்திரத்தை 3 மொழிகளிலும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகின் எந்த மனிதாபிமான சட்டங்களையும் மதிக்காது குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை தனது அரசியல் நோக்கங்கிளிற்காக பல்லாண்டுகளாக தடுத்து வைத்திருக்கும் பேரினவாத சிங்கள அரசு தன் நோக்கங்களிற்கு அப்பாவிகளை தொடர்ந்தும் வதைத்து வருவது வேதனைக்குரியது