ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஒழுங்கான தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் விடுவிக்க கோரியும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரு கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
இந்த போராட்டம் இன்று மன்னார் பாலத்திற்கு அருகில் காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் காணமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் உறவினர்கள் அருட்தந்தையர்கள் மத குருக்கள் சமூக ஆர்வலர்கள் மன்னார் நகரசபை தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.
போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்த கொண்டனர்.
அந்த வகையில், நிலைமாறுகால நீதி எங்கே, இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?
உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியவாரு கண்ணீருடன் போரட்டத்தில் கலந்து கொண்டனர்.