பொதுவாக இதய நோய்கள் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதொன்றுதான் என இதுவரைக்கும் நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில் அது தவறு. பெண்களின் இதயம் ஆண்களின் இதயம் போன்ற அமைப்பைக்கொண்டிருந்தாலும் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
பெண்களின் இதய அறைகள் சிறிதாகவும், மேலும் சில அறைகள் மெல்லியதாவும் இருக்கும். ஆண்களை விட பெண்களின் இதயம் சற்று வேகமாக துடிக்கும். 10% குறைவான அளவே இரத்தம் பம்ப் செய்யப்படும். ஒரு பெண் மனஅழுத்தத்தில் இருந்தால் அவர்களின் நாடி த்துடிப்பு மட்டுமே அதிகரிக்கின்றது.
ஆகவே இதயத்திலிருந்து அதிக. இரத்தம் பம்பப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் மனஅழுத்தத்திலிருந்தால் அவரின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த வித்தியாசம் ஏன் காணப்படுகிறது? இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதன் சிகிச்சைகள் எல்லாம் இதைப்பொறுத்து மாறுபடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
கரோனரி தமனி நோய்
இந்த கரோனரி தமனி நோய் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஏற்படும் நோயாகும். இந்த நோயில் கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து அப்படியே அது வளர்ந்து இதயத்திற்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுக்க ஆரம்பித்து விடும். இந்த படிக கொழுப்புகள் பார்ப்பதற்கு மென்மையாக இருந்தாலும் இதை சிதைக்க முடியாது.
இதனால் இதய இரத்த ஓட்ட பாதையில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் உறைவு ஏற்படுகிறது. இதுவே இறுதியாக ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கி விடும். இந்த நோய் பெண்களைத் தான் அதிகளவு பாதிக்கிறது. இது ஹார்ட் அட்டாக்கை காட்டிலும் வித்தியாசமான அறிகுறிகளை காட்டுவதால் இதை கண்டறிவதும் சிரமமாக உள்ளது. இதனால் பெண்களுக்கு இதன் அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே சிகிச்சையும் சிரமமாக இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
அபாய காரணிகள்
பெண்களுக்கு கரோனரி தமனி நோய் ஏற்பட முக்கி காரணம் எண்டோமெட்ரோஸிஸ், பாலி சிஸ்டிக் ஓவர்ரைன் சின்ட்ரோம், டயாபெட்டீஸ் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவை கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. எண்டோமெட்ரோஸிஸ் என்ற நோய் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 % கரோனரி தமனி நோய் அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அதே மாதிரி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை அளவு, அதிக கொலஸ்ட்ரோல், புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் பருமன் இருந்தால் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே மாதிரி பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் 55 வயதிற்குட்பட்ட அப்பா, அண்ணா அல்லது 65 வயதிற்குட்பட்ட அம்மா, தங்கை போன்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது.
முதலாவது ஹார்ட் அட்டாக்
ஆண்களுக்கு பெண்களை காட்டிலும் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது மட்டுமே அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தான் ஹார்ட் அட்டாக் வரும் ஒரு சராசரி பெண்ணின் வயது 70, அதுவே ஒரு ஆணுக்கு 66 ஆக உள்ளது.
ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்
மார்பகத்தில் மிகுந்த வலி, கனம் என்பன ஏற்படுதல். மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன் நுட்பமான அறிகுறிகள் தென்படும். சோர்வாக இருக்கும். ஆனால் தூங்க முடியாது.நெஞ்சு சற்று கனமாக இருக்கும்.மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வியர்த்தல்.வேலையில் ஈடுபடும்போது அதிகமாக மூச்சிரைத்தல் ,உட்காரும்போதே வியர்த்தல் போன்ற. அறிகுறிகள் தென்படும்.
கழுத்து, முதுகு மற்றும் தாடையில் வலி கைகளில் வலி ஏற்பட்டு அப்படியே கழுத்து, முதுகு, தாடை மற்றும் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படும்.
கண்டறிதல்
இதயத்தில் ஏற்பட்டுள்ள பெரிய இரத்த குழாய் அடைப்பை போக்க கத்தீட்டர் முறை மூலம் ஆஞ்சியோகிராம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த கரோனரி தமனி நோயில் சிறிய இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டறிய இயலாது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக் கடினமானது
பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மிகவும் அபாரமாகமான ஒன்று. சிகச்சைக்கு பிறகு நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டும். சில சமயங்களில் இதில் இறப்பு கூட ஏற்படுகிறது. இந்த மாதிரியான மாரடைப்பு பெண்களுக்கு ஏற்பட முக்கிய காரணம் டயாபெட்டீஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை பாதிப்பு தான்.
மருந்துகள்
ஒரு தடவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடன் தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மறுபடியும் இரத்தம் கட்டுதல் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்கான மருந்துகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக பின்பற்றாததால் தான் 12 மாதங்களில் மறுபடியும் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதயம் செயலிழப்பு
ஆண்களுக்கு இதயம் செயலிழப்பு என்பது இதயம் சுருங்கி விரிதலில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுகிறது. இதுவே பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, இதனால் உண்டாகிறது. பெண்களுக்கு இதயம் செயலிழப்பு காணப்பட்டாலும் ஆண்களை விட நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். இருப்பினும் அடிக்கடி மருத்துவ சிகிச்சை மேறுகொள்ளுவது, உடம்பை பராமரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
ஆர்டரி பிஃபரலோசன்
இந்த பாதிப்பில் இதய மானது சரி வர துடிக்காது. இதய துடிப்பு ஒழுங்கற்றதாக இருக்கும். இந்த பாதிப்பால் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் நீண்ட காலம் வாழலாம்.
எப்படி எங்களைப் பாதுகாப்பது
புகை பிடிப்பதை தவிருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள், மீன், இறைச்சி போன்றவற்றை குறைவாக எடுத்து கொள்ளுங்கள். கார்போஹைதரேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணாதீர்கள்.
உடல் எடையை பராமரியுங்கள், இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடு, இரத்த சர்க்கரை அளவை பராமரித்துக்கொள்ளுங்கள்.