எம் வாழ்க்கையை இந்த தேர்தல் தீர்மானிக்கப்போவதுமில்லை ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் எமக்கு எந்த நன்மையும் இல்லை,நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் .
யாரையும் ஆதாரிக்கவோ புறக்கணிக்கவோ இல்லை. தேர்தல் கடமையென்பது அவர்கள் விருப்பு சார்ந்தது. எனவே வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். என 8 மாவட்டங்களுக்குமான காணாமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.
கட்டுமரம் இணையத் தளத்திற்கான தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் எம் போராட்டம் தேர்தல் அன்று 1000 ஆவது நாளை எட்டவுள்ளது இன்று வரை எமக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நல்லிணக்க அரசு என்று எமக்காக எந்த தீர்வு ம் தரவில்லை. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருகின்றோம்.
தேர்தல் எங்களுக்கு எந்த மாற்றமும் தரப்போவதில்லை. ஆனாலும் நாம் எவரையும் .ஆதரிக்கவும் இல்லை .புறக்கணிக்கவும் இல்லை. வேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு எடுக்கட்டும்.
ஆயிரமாவது நாட்களைத் தொடும் வலிந்து காணாமலாக்கப் பட்டோர் உறவுகளின் போராட்டம் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதாகவே உள்ளது .பாதிக்கப்பட்ட எமது போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் .தங்கள் சுயநலத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்,. எந்த அரசினாலும் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை . ஆயினும் அன்றைய தினம் லண்டன் , கனடா உட்பட 8 நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளது என்றார்.
இந்நிலையில்
கடந்த 20.02.2017 இல் அமைப்பு இரீதியாக வலிந்து காணாமலாக்கப்பட் டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமலாக்கப் பட்டோரின் உறவுகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடு படத் தொடங்கினர். வீதி மறியல் போராட் டம், உண்ணாவிரதப் போராட்டம் தீச்சட்டி ஏந்துதல் தேங்காய் உடைத்தல் , எனப் பல்வேறு போராட்டங்களை நடாத்திய அவர்கள் வடக்கு கிழக்கில் மொத்தமாக 8 இடங்களில் போராட்டக் களங்களை உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் காணாமல் போனவர்களுக்காக மட்டுமன்றி காரணமின்றி சிறையில் அடைத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலைக்காகவும் , பயங்கரவாத தடைச்ச சட்டத்தை நீக்கவும் கோரியும் போராடி வருகின்றனர்.
காணாமலாக்கப் பட்ட தங்கள் பிள்ளைகளின் புகைப் படங்கள் காணாமல் போன திகதி , காணாமல் போன இடம் என்பவற்றை குறிப்பிட்டு பதாகைகளாக ஏந்தியும் , காட்சிப் படுத்தியும் வெய்யில் மழை ,குளீர் என்றும் பாராது 24 மணி நேரம் தமது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இப் போராட் டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள் , கட்சிகள் என பலரும் இணைந்து வலுச் சேர்க்கும் வகையில் ஈடுபட்டும் வந்தனர் . இப்போது அவர்கள் எல்லோரும் ஓய்ந்து போக காணாமல் போனோரின் உறவுகள் மட்டும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
. கடந்த 2018 ஆவணி மாதத்தில் இருந்து வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான சங்கம் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அண்மையில் அலுவலகமாக இயங்கி வருகின்றது. .இப் போராட்டக் களம் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாடகைக்கு இயங்கும் ஓர் வியாபார நிலையத்தில் இயங்கி வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப் பட்டுள்ளனர் .தமது உறவுகளை தேடி அலைந்த உறவுகளில் வடக்கு கிழக்கில் 38 உறவுகள் தமது உறவுகளை காணாமலே காலமாகியுள்ளனர் .
இவர்கள் குடும்பமாகவும் , தனியன்களாகவும் காணாமலாக்கப் பட்டுள்ளனர் . குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் , சிறுவர்கள் அடங்கலாக காணாமலாக்கப் படோரின் பட்டியல்கள் நீள்கின்றன .இருந்த போதும் இராணுவ சுற்றிவளைப்பின் போதும் , இராணுவத்தினால் கைது செய்யப்பட்டும் , சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டும், பொது இடங்களில் கடத்தப் படும் , வெள்ளை வானிலை கடத்தப்பட்டும் , இராணுவத்தினரிடம்சரணடைந்தும், இராணுவத்தினரிடம் கையளிக்கப் பட்டும் என்ற வகையில் இராணுவத்தினரால் காணாமலாக்கப் பட்டோரின் வகையறாக்கள் உள்ளன.
காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம், அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, காணாமல் போனோரின் உறவுகள் 14.07.2018 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்
பல ஆணைக்குழுக்கள் தமக்கான நீதியைப் பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி விட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இராணுவத்தில் சரணடைந்த தமது உறவுகளை தங்களிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள்விடுத்ததுடன், காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிராக பல கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடித் தீர்வு என்ற பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்.காணாமல் போனோர் தொடர்பாக பக்கச்சார்பற்ற, சுயாதீனமான விசாரணைகளை நடாத்துவோம். அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உங்களின் உறவுகள், கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்து நீங்கள் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன், எனது விடயங்களை நீங்கள் செவிமடுக்க வேண்டுமென்பதுடன், உங்களின் பிரச்சினைகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஆயினும் நான், உங்கள் உறவுகளை நிச்சயம் தேடித் தருவேன் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்.காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதென்பது சிக்கலான விடயம் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அன்றய தினம் தெரிவித்தார். ஆயினும் ஆகஸ்ட் 2019 24 இல் யாழ் கல்வியங்காட்டில் இரவுடன் இரவாக எதிர்ப்பு நிலையில் காணாமல் போன அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .
அண்மையில் தேர்தல் பிரசார நடவடிக்கை மேற் கொள்ளும் வகையில் வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் போர் நடவடிக்கையில் காணாமல் போதல் சம்பவம் தவிர்க்க முடியாதது என்றும் கண்டறிவதத்திற்கு போலீசாரின் வளங்கள் போதாது என்றும் தெரிவித்தார்
மேலும் இது குறித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் குறிப்பிடுகையில்
‘’
அறிக்கை எழுதி எல்லாம் ஜனாதிபதியிடம் கொடுத்தாச்சு . அதுக்கு பிறகு என்ன நடவடிக்கை எண்டது தான் தெரியலை
கையில பிடிச்சுகொடுத்த பிள்ளை எங்க ? அதை தானே நாங்கள் கேக்கிறம் . இராணுவத்தை பாதுக்காப்போம் எண்டு ஜனாதிபதி சொல்றார். ஒரு விசாரணையும் இல்லாமல் தேடாமல் விடுவினம் .உலக நாடுகளும் இலங்கைக்கு சார்பாக தான் இருக்குமே தவிர மக்களிண்ட இழப்புக்கு ஒன்றுமில்லை. தேடவும் மாட் டான். ஆளையும் தரமாட்டான். பிள்ளையும் இல்லை. உயிரையும் தரமாட்டான். ஆளையும் தரமாட்டான், காரணமு ம் சொல்லமாட்டான்.
இராணுவத்தை விசாரிக்க முடியாத அரசாங்கம் எப்படி பிள்ளையை தரும் . ஜெனாதிபதியுடன் நின்று படம் எடுத்த பொம்பிளபிள்ளை எங்க ?. அது கூட என்னும் பதில் சொல்லவில்லை. மரண சான்றிதழ் தாறம் . ஒரு லட்ஷம் காசு தாற ம் எண்டு ஏமாத்துறது தான் நடக்குது
மரண சான்றிதழில் தற்காலிகம் என்றும் , பிள்ளை வந்தால் மீண்டும் அந்த சான்றிதழ் இரத்து செய்யப்படும் என்றும் , கொடுத்த உதவிகள் திரும்ப பெற மாட்டாது எண்டும் அறிக்கையில சொல்லுகினம். இது இந்த போராடடத்தை முடக்க தான் சொல்லுகினம். இவளவு காலமும் தேடி தர முடியாதவை எப்ப தேட போக்கினம். ?.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அமலுக்கு வந்தது. இது தகவல் அறியும் உரிமைச் சடடத்தினை [RDI ] பயன்படுத்தி காணாமலாக்கப் பட்டோ ரின் தகவல்களையோ , அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியவோ சாத்தியங்கள் இருக்கும் என நாங்கள் நினைக்க இல்லை . இந்த சட் டம் மக்களுக்கு உதவும் என்று தெரியவில்லை. . ஆட்களை கண்டுபிடிக்க தெரியாதவர்கள் எப்படி இதனூடாக பதில் சொல்வார்கள்?
omp என்ன பயன் ?அவர்கள் எங்களை ஏமாற்றத்தான் வந்தவர்கள். .அவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் அவர்களால் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை எங்கட காலம் போகிதே தவிர ஒண்டும் முடிவில்லை.
மக்களிண்ட இடங்களை இராணுவம் வைத்துள்ளது. மக்களுக்கு தொழில் இல்லை உழைப்பு இல்லை. முல்லைத்தீவு மாவட்டம் முழுக்க இராணுவம் தான் அதிகாரம் பண்ணுது. . எங்களுக்கு அரசாங்கம் தான் எங்கட பிள்ளைகளிண்ட நிலைக்கு பதில் சொல்ல வேணும் . மக்களின் காணி, பறி போயிருக்கு .சாப்பாட்டுக் கடை, புடவைக் கடையும் முன்பள்ளி பாடசாலை , விவசாய உற்பத்தி , சலூன், இரணமடு தண்ணி கூட எமக்கு இல்லை. இதெல்லாம் தமிழ் மக்களின் சொத்துக்கள் .மக்களிடம் கொடுக்கும்நிலைமை இல்லை. எம்மைக்கு தொழில் இல்லை. . எமக்கு விவசாயம் செய்ய முடியவில்ல. குடிக்கிற தண்ணிக்கு பிரச்சனை. பொம்பிள பிள்ளை இங்க நின்மதியாக வாழ முடியல. எந்தப் பக்கத்தால் என்ன பிரச்சனை வருது எண்டு தெரியல யுத்தம் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் , சமாதான காலம் இராணுவத்துக்கு தமிழ் மக்களிண்ட இடத்தில வேலை இல்லை எண்டால் அவையை அவையிண்ட இடத்துக்கு அரசாங்கம் அனுப்ப வேண்டியது தானே எதுக்கு எங்கட இடத்தில வைச்சிருப்பான் நாங்கள் உழைப்பும் இல்லை வருமானமும் இல்லாமல் கஷ்டப் படுறம் .
ஐநா சபையும் நடு நிலைமையாக நடக்க இல்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் உள்ளார்ந்த நிலை புரியவில்லை. இலங்கை அரசுக்கு சார்பாக தான் ஐ .நா செயற்படுது . எங்களுக்கு ஒரு தீர்வும் இல்லை. உரிமைக்கு தீர்வு இல்லை.
வேதனை என்னவென்றால் .புத்தனின் பெயரால் தான் எமக்கு அழிவு நடக்குது. அரசாங்கமும் விதலைப் . புலிகளை வைத்து தான் அரசியல் நடத்தி காலம் கடத்துகின்றனர். தமிழ் மக்களிண்ட அடிப்படைப் பிரச்னைக்கு தீர்வு இல்லை. மக்களை காப்பாற்ற இல்லை. மாறி மாறி குண்டை போட்டு கொலை தான் செய்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், இன்று வரை காணாமல் போனோர் தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.
; “நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கு முன்னர், எங்கள் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொண்டு, எங்களுடைய உறவுகளை மீட்டுத்தருவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேவேளை, இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகளும் நடத்தப்பட வெண்டும். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால், நாங்களும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவோம்” என்று கூறினார்
- யாழ் தர்மினி