1 ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது. என்கிறீர்கள். ஆயினும் ஜனாதிபதியாக சஜித் அல்லது கோட்டப்பாயா இருவரில் ஒருவர் வரத்தான் போகின்றனர் . புறக்கணிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கும் விளைவு என்ன ?
இருவரில் ஒருவர் தான்.வெல்லலாம் . ஆனால் பிரதான கட்சிகளின் சிங்களத் தலைமைகள் . குறிப்பாக 2009 போருக்கு பின்பு தமிழ் மக்களின் நலன்களில் முற்று முழுதாக புறக்கணிச்சு வருவதை காணலாம் . . போருக்கு முன்பு விடுதலைப் புலிகள் இருக்கும் காலத்தில் இருந்ததுக்கும் இப்போதும் மாறி உள்ளது. தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்கலாம் என்று தான் முன்பு கருத்து வெளியிட் டவை போரின் பின்பு தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லை .சிங்கள மக்களின் வாக்கு தான் தேவை . என்பதுடன் கூடுதலாக சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வாழலாம் என்பது மக்களின் சிந்தனையாக உள்ளது. . எம்மைப் பொறுத்த வரையில் இந்த நிலையில் இருந்து ஒரு உடைவை , ஏற்படுத்த வேண்டும் .தமிழ் மக்களின் வாக்குகள் தேவைப்படும் தரப்புகளுக்கு தமிழ் மக்களின் நலன்களை உள்ளவங்கி அவர்கள் செயற்பட தயார் என்ற கோணத்தில் நம்பக் கூடிய வகையில் அவர்கள் செயற்படுவதன் ஊடாக மட்டும் தான் தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கும் என்ற நிலைமையை நாங்கள் உருவாக்குவோம் . . முற்று முழுதாக தமிழ் மக்களின் உரிமைகள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு அது தேவையில்லை என்ற போக்கில் இருந்து உடைவை ஏற்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஒட்டுமொத்தஇனமாக இணைந்து இதை புறக்கணிக்கின்றோம் . என்ற முடிவுக்கு வராமல் இந்த போக்கில் இருந்து மாற்றம் கொண்டு வர முடியாது.
- மக்கள் எந்தளவில் புறக்கணிப்பைஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்கள் ?.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது ஒரு அரசியல் அமைப்பு மக்களை வழி நடத்த வேண்டியது எங்கட பொறுப்பு. 2015 தேர்தலில் கூறினோம் இத்தேர்தல் ஆள்மாற்றமே தவிர கொள்கை மாற்றம் அல்ல என்று. மக்களுக்கு கூறினோம் . . ஆட் சி மாற்றம் என்றால் கொள்கை மாற்றம் வரும் ஏமாறவேண்டாம் இரண்டு தரப்பும் ஒன்று .என்றோம் . அப்போது மக்கள் அதை விளங்கவில்லை.
இப்போ எமது மக்கள் தங்கள் தெரிவு செய்த தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர்கள் தம்மை ஏமாற்றுகின்றனர் என்ப தை விளங்கிக் கொண்டதுடன் தங்களுக்கு இருக்கக் கூடிய பாதிப்புக்கள் தமது நலன்கள் முற்று முழுதாக ஓரங்கட்டப் பட்ட போது தமிழ்தேசியக் கூட்ட்டமைப்பு நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து ஒரு தரப்பை பலப்படுத்தும் நிலையில் இருந்து கொண்டு ஏற்கனவே பாதிக்கப்படட மக்கள் தாங்களே நேரடியாக வந்து தங்கட உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட்னர் நாங்கள் இதனைக் கூறிய போது ஐந்து வருடத்துக்கு முன்னர் எங்கட மக்கள் விளங்கிக்கொள்ளவில்லை . . இன்று எமது மக்கள் விளங்கிக் கொள்கின்றனர். ஆயினும் இத்தனையும் விளங்காமல் இருக்கலாம். அதற்காக எங்கட கருத்தை உள்வாங்க மாட்டினம் விளங்கிக் கொள்ளாமல் இருப்பினம் என்ற காரணம் இருந்தாலும் கூட எமது பொறுப்பில் இருந்து தவற முடியாது .
- புறக்கணிப்பதன்ஊடாக மீண்டும் தமிழ்இனத்தின் மீதான இன வன்மங்கள்அதிகரிக்காது என்று நினைக்கின் றீர்களா?
யார் ஜனாதிபதியாக வந்தாலும் நாங்கள் இந்த போக்கிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தாத வரைக்கும் இது நடக்கும் . தேர்தலுக்கு போட்டி போடுகின்றனர் என்றால் தமிழ் மக்கள் வாக்கு இல்லாமல் வெல்ல முடியாது . தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றால் நிச்சயம் வெல்லலாம் என்ற நம்பிக்கை கொடுக்கக் கூடிய வகையில் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் . உறுதியாக இருந்தால் தான் மக்கள் வருவினம்.
- தமிழ் மக்களின் வாக்குகள் புறக்கணிப்பதன் ஊடாகதுஸ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்படாதா?.
இல்லை . அதற்கான வாய்ப்புக்கள் மிக்க குறைவு . அடையாள அட் டையினை உறுதி படுத்தும் நிலையில் . அங்கு வாக்குச்சாவடியில் உள்ள அனைவரும் இணைந்து ஒத்துழைத்தால் ஏதும் நடக்கலாம் . அலுவலர்கள் மட்டுமன்றி கட்சி சார்ந்தும் ஒத்துழைச்சு ஒரு மோசடித் திட்டத்துக்குள் இறங்கினால் தவிர . ஆனால் அந்த நிலை மிக குறைவு. அவ்வாறு செய்ய முயற்சித்தலும் வெளியில் வராமல் மூடி மறைப்பது கஷ்டம் .
- தமிழ் மக்களின் 13அம்சக்கோரிக்கையும் 5 கட்சி களும் முன்வைக்கையில் அது ஏற்கவில்லை .பின்பு எப்படி தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்க முடியும்.?.
5 கட்சியும் 13 கோரிக்கைக்கும் விசுவாசமாக செயற்பட தயாரில்லை.இப்படி இருக்கும்போது சிங்கள கட்சிகளை எப்படிகேட்க முடியும் . அவர்களுக்கு இது முக்கியம் இல்லை. அந்த நிலையில் சிங்களத்த தலைவரிடம் எப்படி கேட்க முடியும்?.
சிங்கள தரப்புகள் கோரிக்கையை நிராகரிக்கும் போதே அந்தக் கட் சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று . சொல்லி இருக்க வேண்டும்
கோரிக்கை முக்கியமில்லாட்டியும் வாக்களியுங்கோ என்று மறைமுகமாக சொல்கின்றனர் .கட் சிகளுக்கு 13 கோரிக்கையும் முக்கியம் இல்லை வெறும் கண் துடைப்பு.. 5 கட்சியும் கோட்பாடுகளுக்கு முக்கியமானவர்கள் இல்லை.
இந்திய இந்த தேர்தலில் விசேடமாக கோத்தபாயாவுக்கு செய்தி அனுப்ப விரும்பியது போர் முடிந்து 10 வருடமாகியும் தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு இந்தியா தமது முகவர்களாக இருக்கக் கூடிய 5 கட் சிகளுடனும் செயற்படுகிறது.
தமிழ்த் தேசிய அரசியியலில் இருந்து தேசிய வாதத்தை நீக்குவதற்காகவே தமிழ் அரசியல் செயற்றப்பட்டு வருகின்றது. .
அந்த நிலையில் கோத்தபாய ஆட்சிக்கு வந்து இந்தியாவையும் புறக்கணித்து இந்தியாவுடன் நடப்புறவாக உள்ள மேற்குலக நாடுகளையும் புறக்கணித்து அவைக்கு சவாலாக இருக்கக் கூடிய தரப்புகளுடன் பேசி சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க போகின்றனர் என்றால் இவளவு காலமும் தமிழ் தேசிய நீக்கத்திற்கு இந்தியா பாவித்த 5 கட்சிகளையும் கொண்டு , …அவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்து தமக்கு நெருக்கமான 5 கட்சிகளுடன் சேர்ந்து தமிழ்த்தேசிய வாதத்தை கடுமையாக கடைபிடிக்க ஒத்துழைப்பேன் .
அவர்களுக்கு நான் அந்த கட்டளையை இடுவேன் . என்னுடைய வழிக்குள் வந்தீர்களாயின் .
அணைத்து கொள்கைகளையும் கைவிட் டு ஒற்றை ஆட்சிக்குள் அணைத்து கொள்கைகளையும் முடக்குவதற்கு தயாராகவுள்ளேன் . என தனது 5 கட்சி முகவர் ஊடாக இந்திய ஒரு தகவலை கொடுத்துள்ளது.
.இந்த 5 கட்சிக்கும் கோட்பாடுகளில் விசுவாசம் இல்லை. இந்த கோட்பாடுகளை தயாரித்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.
5 கட்சியும் தயாரித்த ஆவணம் அங்கு இருந்தது. தயாரித்த ஆவணம் 13 ஆம் சீர் திருத்த சட் டம் நடைமுறைப்படுத்தும் கோணத்தில் தான் தயாரிக்கப் பட்டு இருந்தது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதில் சில திருத்தங்களை செய்து தான் அந்த ஆவணம் முழுமையானது. எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை தமிழ்த்தேசிய முன்னணி இந்த அரங்கிற்கு வந்தால் எந்த கோட்பாடுகளை முன்னிறுத்துவோம் இல்லையேல் வெளியேறுவோம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் .
தெரிந்தும் எங்களைக் கூப்பிட்டது நாம் வலியுறுத்த எமது கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டது .எல்லாமே ஒரு திட்டத்தின் அடிப்படையில் தான்.எமக்கு ஊடாக கோட்பாடுகளை பலப்படுத்த வைத்தார்கள். உண்மையில் விசுவாசம் இருந்தால் முன்பே தயாரித்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரித்து இருக்க வேண்டும் . அதனை நிராகரிக்க சொன்னதும் அதற்கு தயாரில்லை.
கோட்டாவுக்கு சொல்கின்றனர் எமது வழிக்குள் வராமல் தொடர்ந்தும் சீனாவுடன் இருந்தால் தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்துவோம் ..
ஆனால
இந்தியாவின் ஆதிக்க வட்டத்துக்குள் வரத் தயார் என்றால் தமிழக கட்சிகளின் ஊடாக ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்று தமிழ் அரசியலை ஒற்றை ஆட்சிக்குள் முடக்குவோம். என்ற இரண்டு செய்தியையும் கொடுப்பதத்திற்கு தான் அவர்கள் 5 கட்சி நாடகம் நடந்தது.
- கொள்கைகோட்பாடுகளை அங்கீகரிக்க வைக்க என்ன செய்கிறீர்கள் ?
தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாடுகளை விளங்கிக் கொண்டு நாங்கள் தான் கோட்பாடுகளுக்கு நேர்மையாக இருக்கின்றோம். நாங்கள் தான் இதனை அடைவதற்கு ஒரு திட்டம் வைத்துள்ளோம் .என்பதை கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கணிசமான மாற்றங்கள் வந்தன.
- என்ன மாற்றங்கள் |?.
. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அனைத்து வாக்குகளின் எண்ணிக்கையிலும் 2 ஆம் இடத்தில் உள்ளோம். . 2015 இல் கடைசி இடத்தில் இருந்தோம். வடக்கு கிழக்கில் இரண்டாவது தனிப் பெரும் கட்சியாக உள்ளோம்.
நாங்கள் மக்களுக்கு நேர்மையாக நடப்பதை எந்த ஒரு வராலும் தடுக்க முடியாதது .
அடுத்துடன் தமிழ்த்தேசிய அரசியலை எவருமே எங்கட அரசியலில் இருந்து நீக்க முடியாது .என்பதை நாம் உறுதி படுத்துவோம்.
- 5 காட்சியின்13 கோரிக்கையும் தமிழ்த்தேசிய முன்னணி உருவாக்கியுள்ளது என்றால் நீங்கள் பின்பு ஏன் அக்குழுவிலிருந்து வெளியேறினீர்கள் ? . கொள்கை யில் இருக்கும் நீங்கள் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேறி பல்கலைகழக மாணவர்கள் கூப்பிடும் போது அங்கும் போய் , அடிப்படையில் இவர்களுடன் ஒத்து வராது என்று தெரிந்தும் ஏன் போனீர்கள் ?
நாங்கள் ஒற்றுமைக்கு மாறானவர்கள் அல்ல . ஆனால் அந்த ஒற்றுமை கொள்கை ரீதியாக வரவேணும் நாங்கள் பல்கலைக் கழக மாணவர்களுக்கு சொல்லியிருந்தோம் .5 கட்சியும் நிலைப்பாடுகளுக்கு இணங்காது விட்டால் இவர்களுடன் வேலை செய்ய முடியாது போலி ஒற்றுமைக்கு கடைசி வரை வரமாட்டோம் என்றோம். அவர்கள் சொன்னார்கள் கட்டயம் வரவேணும் . பரவலாக . இந்த தேர்தல் மக்கள் மத்தில் வித்தியாசமாக அணுகப் பட வேண்டும் . இந்த தேர்தலை கடந்த தேர்தல்களைப் போல பிழை விட முடியாது. என்றனர்.
சாதாரண மக்களிடம் உள்ள கருத்து என்ன வென்றால் ஒற்றுமையாக சேர்ந்து தமிழ் மக்கள் சார்ந்து தரப்புகளுடன் பேரம் பேச வேணும் சும்மா கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கின்ற நிலை இருக்க முடியாது என்று தான் பரவலாக ஒரு கருத்துருவாக்கம் இருந்தது.
இந்த பின்னணியில் தான் அனைவரையும் ஒன்றாக்கும் வகையில் மாணவர்களின் முயற்சி தொடங்கியது .
இந்த நேரம் தான் பேரம் பேசலுக்கு எவ்வாறான வகையில் கருத்துருவாக்கத்தை செய்யலாம் என்று நாம் சொல்லும்போது . ஒரு ச மூக மட்டத்தில் இருக்கும் ஆதரவு ஆர்வத்தையும் வைத்துக்கொண்டு
இந்த தரப்புகள் ஏலாத த கட்டத்தில் இணங்க வேண்டி வரும் .என்ற நம்பிக்கை எம்மிடம் இருந்தது . 13 கோரிக்கையும் நிராகரித்தவர்கள் விசேடமாக தமிழர் தேசம் , தமிழர்களுக்கு ஒரு இறைமை உண்டு என்ற கோட்ப்பாடுகள் 5 தரப்பும் கடந்த 10 வருசமாக நிராகரித்து வந்தனர். விக்கினேஸ்வரன் , மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட. பேரவையிலும் நிராகரித்தனர். நாங்கள் மட்டும் தான் இன்று வரை தமிழர் தரப்பின் தீர்வுத்திடடத்தை பேசியொண்டுள்ளோம்
இந்த நிலை இருப்பதால் நாங்கள் நம்பினோம் ஏலாத கட் டத்தில் இணங்க கூடும் என்று.ம் .அந்த நிலையில் ஒற்றுமை பற்றி ஜோசிக்கலாம். இது நாங்கள் போட்டியிடும் தேர்தலுக்கான ஒற்றுமை அல்ல. நாங்கள் அனைவரும் இணைந்து மக்களுக்கான செய்தியை கேட்கின்றோம் .கூட் டணியை உருவாக்கப் போவதில்லை.
/ அந்த கோணத்தில் இயன்ற அளவுக்கு ஒரு பொது நிலை பாட்டை எடுக்க இணங்கினோம் . ஆனால்.இவர்கள் கோஷங்களுக்கு இணங்குகின்றனர் . கோஷங்களை நடை முறைப்படுத்துமிடம் பாராளுமன்றில் இருக்கும் அரசியல் நிர்ணய சபை. அதற்கு கு ஏற்கனவே முன்பு ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது .உண்மையில் கோஷங்கள் கோரிக்கைகளுக்கு நேர்மையாக நடக்கப் போகின் றீர்கள் என்றால் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேணும் .
ஆனால் அதுக்கு அவர்கள் தயாரில்லை. உண்மையில் கொள்கைகளை வலியுறுத்தி பிழையான விடயத்தை நிராகரிக்க வேண்டிய இடத்தில் நிராகரிக்க 5 கட்சியும் தயாரில்லை இதில் தெளிவாக தெரிகிறது இவர்கள் இந்தியா சொல்லி தான் கொள்கைகளை இணங்கினார் களே தவிர நேர்மையாக இயங்க வரவில்லை. சரியான பாதையில் செல்பவர்கள் தவிர பிழையான பாதையில் செல்பவர்களை அம்பலப் படுத்துவது முக்கியமான அம்சம்.
13 கோட்ப்பாடுகளையும் நிராகரித்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உங்களால் சொல்ல முடியாட்டி நீங்கள் ஏன் 13 கோட்ப்பாடு முன்வைக்கவேண்டும் .????
- அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குறித்தும் கேப்பாப்புலவு போராட் டம் காணி விடு விப்பு என்று போரின் பின்பும் அவலங்களின் .போராட்ட்ங்கள் முடிவின்றி . தொடர்கின்றது . ..இந்நிலையில் ந ல்லிணக்க அரசாங்கம் கொடுக்காத தீர்வு இனி எந்த அரசு கொடுக்கும் ?
எங்கள்ட மக்கள் வாக்களித்து அனுப்பிய தமிழ் த் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினரின் பலத்தில் தான் தங்கி இருக்கு. எத்தனையோ வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வாக்கு இல்லாமல் அரசாங்கம் வெல்ல முடியாது. இவையெல்லாம் தமிழ் மக்கள் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கும் இடத்தில் , விரும்பிய தீர்வை போட்டு பெற்றுக் கொள்ள
பாதிக்கப் பட்டமக்களுக்கு பொறுப்புக்கூறலைக் கொடுத்து நீதியை எடுத்துக் கொடுக்கின்ற வகையில் நிபந்தனையை போட்டு இருக்க வேணும் , அரசியல் தீர்வு ஒரு கடினமான விடயம் ஒரு இரவில் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இவ்வாறான சந்தர்பத்தில் நிபந்தனை போட்டு இருக்க வேணும் .
. நல்லாட்சி என்பது சட்டத்தின் ஆட்சி . சட்டவிரோதமான செயல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் கேட்கின்றோம் மக்களின் காணிகளை பறிப்பது சட் டவிரோதம் .காரணமின்றி சிறையில் வைத்திருப்பது சட் டவிரோதம். பயங்கரவாத தடைச்சட்டம் பிழை என்று இந்த அரசாங்கம் ஒத்துக்க கொண்டுள்ளது .
இவை எல்லாம் நல்லாட்சியுடன் சம்பந்தப்பட்டது. அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்டது . இதை கூட நிபந்தனைகளை போட்டு செயற்பட தயாரில்லாத இடத்தில் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதத்திற்கு போராடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .ஆனால் தெரிவு செய்த பிரதிநிதிகளால் எந்த பயனுமன்றி தமக்கான தலைமை இன்றி
மக்கள் தமது தலைவிதியை தீர்மானிக்க வேண்டி உள்ளது. இதனால அவர்கள் தாமாக போராட்டத்திற்கு முன்னுக்கு வருகின்றனர். இந்தநிலைமையை மாற்றுவதாயின் முதுகெலும்புள்ள தமிழர் தலைமைத்துவம் தேவை . தமிழ் மக்களின்நலன்களை மையப்படுத்தி செயற்படும் தலைமைத்துவம் தேவை. இதனைச் செய்யாமல் வேறு வெளிச்ச சக்தியின் நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடிய சக்திகளைத் தெரிவு செய்தால் ஒரு நாளும் எமது மக்களுக்கு முடிவு கிடைக்கப் போவதில்லை. அரசியல் தீர்வு மட்டுமன்றி அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை.
- தமிழ் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார் , தமிழ் மக்களுக்கு மாற்றம் வருமா?
எமக்கு சம்பந்தப் படா தவர் அல்ல.சிவாஜிலிங்கம் ரெலோ லோ உறுப்பினராக இருந்தார் . ரெலோ கூட் டமையப்புடன் சேர்ந்து ஒற்றையாட்சிக்கு இணங்கியது./ இன்று கொள்கையுடன் உள்ளார் என்று வந்தால். எப்படி நம்ப முடியும்
எங்களுக்கே நம்பிக்கை இல்லாத நிலையில் நாங்கள் எப்படி மக்களிடம் சொல்லமுடியும் வாக்களிக்கும் படி .எங்களுடைய அமைப்பு அதனை செய்ய முடியாதது. அதுனால் தான் சொல்றம் நிராகரிக்கும்படி. எல்லாத்துக்கும் மேலாக தமிழ் தேசிய அரசியலை இலங்கை அரசு எதிர்த்து வருகிறது. நாம் இன்னும் இலங்கை அரசை ஏற்கவில்லை. இலங்கைக்குள் தான் உள்ளோம்.
ஜனாதிபதி தேர்தல்ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரியது கடடமைப்பில் ஒரு போதும் தமிழன் வரமுடியாது .ஆனாலும் நாம் இந்த அரசின் செயலை ஏற்கவில்லை என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளோம் /
நேர்காணல்.
யாழ்.தர்மினி பத்மநாதன்
31.11.2019