இந்திய அரசியல் அமைப்பு நாள் – நிகழ்வு நேற்று 26.11. 2019 அன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ச . பாலச்சந்திரன் தலைமையில் யாழ் நூலக இந்தியன் கோனார் பகுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை,யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் . யாழ் பொது நூலக பிரதம நூலகர், யாழ் இந்தியத் துணைத்தூதுவராலய உத்தியோகத்தர்கள், பொது நூலக உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் . மேலும் இந்திய அரசியல் அமைப்பு நாளை முன்னிட்டு அரசியல் அமைப்பு மற்றும் அதனை உருவாக்கிய குழுவினர் பற்றிய ஒரு புகைப்படக் கண்காட்சி யம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ப.தர்மினி