மன்னார் ஓலைதொடுவாய் பகுதியை சேர்ந்த சூசைப்பிள்ளை இராசேந்திரம் (73) என்பவரே நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் திடீர் மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் 2008 ஆம் ஆண்டு மன்னார் ஓலைதொடுவாய் பகுதியில் இலங்கை இராணுவத்தால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தார்.
அன்று முதல் தனது மகனை தேடி மகனின் மனைவியு மருமகளுடன் இணைந்து தொடர்ந்து நீதிகோரிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட இவரது மகனின் மனைவி ஜெயக்குமாரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளராக செயற்ப்பட்டும் வருகின்றார்.
இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட நீதிகோரிய தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த 56 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிகோரி போராட்டங்களில் பங்கெடுத்து வந்த தந்தை ஒருவர் இன்று காலமாகியுள்ளார்.