அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா ஒழிப்பு பணியில் தாதி தம்பதி இணைந்து பணியாற்றி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..
கொரோனா வைரஸ் பல நாடுகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்துள்ளன. பாதிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மைன்டி பிராக் (38) மற்றும் பென் கேயர் (45) இருவரும் அங்குள்ள நர்ஸிங்கல்லூரியில் மயக்க மருந்தியல் பிரிவில் படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகள் தற்போது டாம்பாவில் உள்ள மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கொரோனாவிற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் இவர்கள் நேரம் கிடைக்கும் போது மட்டுமே பார்த்து பேசிக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியானதாக கூறப்படுகிறது.
கொரோனா வார்டில் பணியாற்றுவதால் பாதுகாப்பு கவச உடைகளுடன் இருவரும் பார்த்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இதில் என்ன முக்கியம் என்றால் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்போம். இதை நானும் பென்னும் மட்டும் செய்யவில்லை. மனிதஇனமே செய்கிறது. மேலும் இது காதல், நம்பிக்கையின் சின்னம் என கூறினர்.