முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலிச் சுடரேற்றும் நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் மு. பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் மாணவர் தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் மெழுகு தீபத்தைக் கையில் ஏந்திய வண்ணம் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் மெழுகுச் சுடரினை உரிய இடத்தில் ஏற்றி தங்களது நினைவேந்தலை உளமார அனுஷ்டித்தமை குறிப்படத்தக்கது.