கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 81,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “உலகம் முழுவதும் சுமார் 81,153 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் இத்தொற்றுக்கு 6,463 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸால் அமெரிக்காவில் 7,64,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,565 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்து ஸ்பெயினில் கரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் 1,98,674 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,453 பேர் பலியாகியுள்ளனர்.