ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் 65 வயது ஹ_ அய்ஜென் தனது நகரில் புதிய கொரோhனா வைரஸ் உருவாகியுள்ளது குறித்து அறிந்தார்.அவர் அது குறித்து கவலையடையவில்லை
அதுமனிதர்கள் மத்தியில் பரவாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக அவர் தனது நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன்,மாத இறுதியில் வரவுள்ள புதுவருடத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார். வுகானில் முடக்கநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அவர் நிமோனியா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார்.
பல நாட்கள் மருத்துவமனைக்காகவும், சிகிச்சைக்காகவும் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவரிற்கு வைரஸ் பாதிப்புள்ளதா என்பதற்கான மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.
ஆனால் மருத்துவபரிசோதனைகளின் போது அவர் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
அந்த மருத்துவபரிசோதனை துல்லியமானதாக காணப்படவில்லை, அவர் மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு ஆறு மருத்துவமனைகள் மறுத்தன.
எப்போதும் ஆரோக்கியமானவராக காணப்பட்ட ஹ_ பத்து நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தார்,அவரால் உணவு உண்ணவோ நீர் அருந்தவோ முடியவில்லை, அவரது உடல்நிலை மோசமடைந்தது,அவரது நிலைமை மோசமடைந்தவேளை அவரது மகன் தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார் ஆனால் காவல்துறையினர் அதற்கு அனுமதியளிக்கவில்லை,
முடக்கல் நிலை காரணமாக ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என்பதே இதற்கு காரணம். தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினரை பார்த்து நீங்கள் மனிதர்கள் இல்லையா என தான் சத்தமிட்டதாக மகன் தெரிவித்தார்.
ஹ_ இறுதியாக பெப்ரவரி 8 ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளை அவர் சுவாசிக்க முடியாத நிலையில் காணப்பட்டார்
மருத்துவர் மற்றுமொரு பரிசோதனைக்கு உத்தரவிட்டார், ஆனால் அது தாமதமான நடவடிக்கை,ஹ_விற்கு சிறிது நேரம் சுயநினைவு திரும்பியது மகனிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட அவர் மகனின் அருகிலேயே உயிரிழந்தார்.
ஹ_வின் மகன் வைரஸ் குறித்த உண்மைகளை மறைத்தமைக்காக வுகான் மாநகரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.சாங்சாவில் உள்ள பியுனெங் என்ற பொதுநல அரசசார்ப்பற்ற அமைப்பொன்று தயாரித்துள்ள நீதிமன்ற ஆவணங்களின் மூலம் இது புலனாகியுள்ளது.
வைரஸ் குறித்து மக்களிற்கு தாமதமாகவே அறிவித்த அதிகாரிகளிடமிருந்து, நஸ்ட ஈட்டை அல்லது மன்னிப்பை கோருகின்ற சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க குழுவினரில் ஹ_வின் மகனும் ஒருவர்.
இது தவிர குபேய் மாநில அரசாங்கத்திற்கு எதிராக அரசஅதிகாரியொருவர் வழக்குதாக்கல் செய்துள்ளார், வைரசினால் தனது 24 வயது மகள் உயிரிழந்ததை பார்த்த தாய் ஒருவர் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்,இதேபோன்று உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட தாயை வுகானின் புறநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துசென்ற போதிலும் அவரை தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட மகனும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது தாய்க்கு பொருட்களை கொள்வளவு செய்வதற்காக அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவேளை அவரது தாய் உயிரிழந்துவிட்டார் என்ற அழைப்பு மருத்துவமனையிலிருந்து வந்தது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களிற்கு உண்மையை தெரிவித்திருந்தால் இவை எதுவும் இடம்பெற்றிராது ,இவ்வளவு பெருந்தொகையானவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என வழக்குதாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
எனக்கு பதில் தேவை இவற்றிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என மற்றொருவர் தெரிவித்தார்.
சீனாவில் வைரஸ் உச்சத்தில் காணப்பட்டவேளை மக்கள் மத்தியில் பல தசாப்தங்களாக காணப்படாத அளவு சீற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக சீனாவின் ஆளும் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியிருந்தது.
கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் பெப்ரவரியில் உயிரிழந்தவேளை சமூக ஊடங்களில் வெளியான சீற்றத்தினை தணிக்கை செய்பவர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது
1989 இல் தினமென் சதுக்க எழுச்சியை தீவிரப்படுத்திய ஹ_யாவோபாங்கின் மரணம் போன்றது அது என சிலர் வர்ணித்திருந்தனர்.
தற்போது இரண்டு மாதங்களிற்கு பின்னர் இந்த சீற்றத்தை வெளிப்படையாக காணமுடியவில்லை, ஹியுவின் கதைகள் போன்றவற்றை வெற்றிக்கதைகள் மறக்கடித்துவிட்டன,கொரோனா வைரசினை சீனா இணைந்து தோற்கடித்தது,உலக நாடுகளிற்கு மருத்துவ பொருட்களை அனுப்புகின்றது, வைரசிற்கு சீனாவே காரணம் என அமெரிக்காவும் ஏனைய உலகநாடுகளும் முன்னெடுத்துள்ள விசமப்பிரச்சாரம் போன்ற கதைகள் முன்னிலை பெற்றுள்ளன.
மக்கள் பிரச்சாரங்களினால் இலகுவாக மாற்றப்படுகின்றனர் என தெரிவித்தார் குபேய் மாநிலத்தின் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் . நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதால், பிரச்சார இயந்திரங்கள் தீவிரமாக இயங்குவதால் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது , வலுவான ஆட்சியே அவசியம் என அவர்கள் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
வுகானும் ஏனைய பகுதிகளும் சுமூகநிலைமைக்கு திரும்பிக்கொண்டுள்ள இந்த தருணத்தில் சீற்றத்துடன் உள்ளவர்கள் என தாங்கள் கருதுபவர்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
பெப்ரவரியில் தந்தையை இழந்த ஜாங்க ஹாய் உட்பட 100 பேர் இணைந்து வீசட் குழுவொன்றை உருவாக்கியிருந்தனர். மார்ச்சில் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களின் உடல்களை பொறுப்பேற்கலாம் என தெரிவித்த அதிகாரிகள் அதற்காக பல நிபந்தனைகளை விதித்தனர்.
ஜாங் அதனை ஏற்க மறுத்தார்,அதன் பின்னர் அந்த குழுவின் ஏற்பாட்டாளர் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த குழு அகற்றப்பட்டது
ஆரசாங்கம் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவிக்கும் ஜாங் பல குடும்பத்தினர் கடும் சீற்றத்துடன் உள்ளனர் ஆனால் அவதானமாகயிருக்க முயல்கின்றனர் என தெரிவித்தார்.
குபேய் மாகாணம் உண்மைகளை மறைத்துள்ளது என தெரிவித்து டான் யுவான் என்ற அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் அந்த ஆவணங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். இதனை உறுதி செய்த அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
உள்ளுர் காவல்துறையினர் தங்களை அச்சுறுத்தி பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டனர் என வுகானை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் பொறுப்பை தங்கள் கரங்களில் எடுக்கவேண்டும்,குபேயின் பிரஜை என்ற அடிப்படையில் குபேய் அரசாங்கம் பதில் கூறவேண்டும் என தெரிவிப்பதற்கான கடமை எனக்குள்ளது என டான் தெரிவித்தார்.
அதிருப்தியை மக்கள் வேறு வழிகளில் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
வுகானில் வணிகவளாகங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாடகையை குறைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். வுகானின் மற்றுமொரு நகரத்தில் உணவுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டமைக்காக அந்த பகுதியின் நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மக்கள் விழிப்படைந்துள்ளனர் அது உறுதி என தெரிவித்த ஜீ யான்யீ என்ற மனித உரிமை வழக்கறிஞர், இவர்கள் பெருமளவானவர்களாக காணப்படாத போதிலும்,சிறிய எண்ணிக்கையானவர்களே சமூகத்தை வரலாற்றை மாற்றுகின்றனர் என குறிப்பிட்டார்.
வைரசின் ஆரம்பம் குறித்தும் அதற்கான காரணங்கள் மற்றும் மக்களிற்கு தகவல்கள் வழங்கப்படாதது குறித்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கார்டியன்
தமிழில் ரஜீபன்