‘பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:’
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை.
உள்ளாட்சித் துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணி களத்தில் இல்லை’ என, தி.மு.க., – எம்.எல்.ஏ., கார்த்திக் சுட்டிக்காட்டிய செய்தியை, இணையதள இதழ் வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, பத்திரிகையாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி, இருவரையும் விசாரணை என்ற பெயரில், காவல்துறை அழைத்து சென்று, அடைத்து வைத்துள்னளர். பின், இணையதள இதழ் நிர்வாக இயக்குனர், ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இது, சட்டவிரோத செயல்; ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடு; அவரை விடுவிக்க வேண்டும். ஊடகத்தினர் மீது, வன்மம் கொண்டு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், வேலுமணியும், காவல்துறை துறையை பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை கண்டிக்கிறேன். ஊடகத்தினர் இடையூறின்றி, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.