ஓட்டுப் போட்ட அமைச்சரதான்
காணலயே ! காணலயே!!
மத்தியில நிதிய வாங்க
ஒருத்தனுக்கும் வாயில்லையே!
வச்சுருந்த காசும் இப்போ
காணலயே! காணலயே!!
பட்டினியா கிடக்குறோம்க
சனமெல்லாம் வீட்டுலையே!
சாமி பேர சொன்னவனெல்லாம்
ஒருத்தரையும் காணலயே!!
நாளு வேளை கும்பிட்டும்தான்
வயித்துக்கு சோறில்லையே!!
ஏழை மக்க எங்களுக்கு
ஆயிரம்தான் போதுமா?
புள்ளைங்கெல்லாம் துடிக்குதுங்க
அரிசி வந்து சேறுமா?
ஊரடங்கு நீடிக்கதான்
செய்தி வந்து சேறுது
பேதலிச்சி நிக்குறோம்க
வறுமைதான் கூடுது
பட்டினியால் சாகப்போறோம்
அரசால் ஒன்னும் ஆகல
சர்கார் தட்டும் ஓசைக்கு
அந்த கொரனாவே தேவல….