வன்னியில் 28-04-2009 அன்று கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 மேல் எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன அதில் 200 அதிகமான பொதுமக்கள் படுகொலைச் செய்யப்பட்டதுடன் 1000 அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில் 27/04/2020 அன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் 28/04/2020 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் படையினரால் முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது 5600 மேல் எறிகணைகள் ஏவப்பட்டது.
அந்தக 17 மணிநேர காலப்பகுதியில் சிறிலங்கா படையினரால் 2600அதிகமான பல்குழல் பீரங்கி குண்டுகள், 1000 அதிகமான ஆட்லறி எறிகணைகள், மற்றும் 2000 அதிகமான மோட்டார் குண்டுகள் என்பன பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலய வாழ்விடங்களை நோக்கி ஏவப்பட்டது.
முள்ளிவாய்க்கால், தாழம்பன்,ஓட்டைப்பானையடி மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இதன்போது சுமார் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள். காயமடைந்தவர்கள் மூன்று மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றார்கள்.
அத்துடன் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்களும் இரட்டை வாய்க்கால், ஓட்டைப்பானையடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்தார்கள்.
இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு திலீபன் மருத்துவ மையங்கள், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலையங்கள், முதலுதவி நிலையங்கள், முள்ளிவாய்க்கால் மருத்துவமனை, முல்லை, கிளி. மாவட்ட சுகாதார பிராந்திய சேவை நிலையங்கள் போன்றவற்றில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுது
இது போன்று மேலும் பல சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் அன்று பதிவாகி இருந்தது. எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் கிடைக்கவில்லை.
மூலம் – விடுதலைப் புலிகள் ஊடகப் பிரிவு
முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் தொகுப்பு நூலில் இருந்து.