துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருக்காமல் வாரத்தில் மூன்று நாட்களாவது தமது தொகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார்.
தமது தொகுதிகளுக்கு செல்லாத அமைச்சர்கள் இருப்பார்களாயின் அவர்களின் தொகுதிகளில் நடவடிக்கைகளை தேடிப்பார்க்க வேறு நபர்களை நியமிக்க வேண்டியேற்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படும் போது அவர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படும்.
பணியாற்றாத எவரும் தொகுதி அமைப்பாளர் பதவிகளை கோர வேண்டாம் என்று பிரதமர் ரணில் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.