ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சுயாதீன அணியாக இயங்க தீர்மானித்துள்ளனர்.
அனைத்து மாகாண சபைகளிலும் ஆளும் கட்சியில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
வடமத்திய, மத்திய, மேல், வடமேல், சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
தென் மற்றும் ஊவா மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.
மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை தேவையான வகையில் மாகாணங்களில் தீர்மானங்களை எடுக்க இடமளிக்க போவதில்லை.
உறுப்பினர்களை குறைவாக உபசரிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவும் கூட்டு எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.