- நச்சுப்புகை நாசவினை ஈழம் நடுங்க
இரத்தக்கறை தூசிப்படை எங்கும் பரவ
குண்டுமழை குடிசைவழி வெடித்துப் பொழிய
பெண்டு பிள்ளை கண்டு பசு எல்லாம் சிதற
முள்ளிக்கரை தொடரும்கறை இன்றும் நடக்கவானம் பொழிந்த கண்ணீர் நிலத்தை நிரப்ப
ஏகம் பிடித்த உலகு எம்மை அழிக்க
தாகம் தவித்த வேங்கை நிலத்தில் விதைய
கோலம் பூண்ட மாந்தர் உயிரை இழக்க
மீதிப் பிணங்கள் இங்கே அகதியாய் அலைய
காலம் தந்த கொடுமை தமிழன் மறக்க
மீண்டும் மதுவின் வினையில் ஈழம் அழிய
கிறுக்கி திரிகிறோம் நாடு சிறக்கவட்டக்கச்சி வினோத்
- வலிசுமந்த இனம் வஞ்சத்தில் வீழ்ந்த சனம்/
பலியாகிப் போனது இனவெறியாட்டத்தின் ரணம்/
புலியெனக் கேட்டால் எலிகளாக ஓடிஒளிந்த கணம்/
கலியுக வெற்றியில் களிப்பைக் கொண்டாடுது தினம்/காணாமல் போனவர்களின் கணக்கும் தெரியவில்லை/
வீணாகிப் போன வாழ்வின் விடையும் புரியவில்லை/
தோணாத வாழ்வும் தொடருது தொலைதூர தேசங்களில்/
தூணாகத் தாங்குதெங்கள் தமிழரெனும் தொன்மரபு/நாட்டைப் பிடித்துவிட்ட நரிகளுக்குச் சொந்தமில்லை/
காட்டிக் கொடுத்துவிட்ட கயவருக்கோ வீரமில்லை/
வேட்டையாடிய விலங்குகளால் வீரமின்னும் சாகவில்லை/
கோட்டையைப் பிடித்துக் கொடியேற்றுவோம் இது கோசமில்லை/சோ.மீனாட்சிசுந்தரம், சென்னை, தமிழ்நாடு.
- பசியென்று
அழுத பச்சிளம் குழந்தை
தேடியும் கிடைக்கவில்லை தாயவளின் மார்பினை.
கூடி பேசி மகிழ்ந்தோடி
வாழ்ந்த பறவைகள்
முள் சிறையில் மாட்டி இறகொடிந்து கிடக்கிறது.குயிலின் ராகமும்
காற்றின் ஓசையும்
ரசித்த செவிகள்
அழுகுரல் மட்டும்தான்
அதிர வைத்து நின்றது.நெல்மணி விளைந்த சோலையில்
கருநாகம் புகுந்து காவு வாங்கி ரத்தம் குடித்து மகிழ்ந்தன.கடவுள் வருவானா
என்று ஏங்கிய கன்னி பெண்ணின் கற்பும் கரைந்துதான் போயின.காக்கும் கடவுள்
அமாவாசையன்று விடுப்பில் போன தருணம் வீதியெங்கும் பிணக்குவியல்.வேதனைகள் எத்தனை
விடியல் இல்லாமல் நிற்கின்றது.வெள்ளைக்கொடி காட்ட
ஒரு ஜீவன் வராதா
ஏங்கிய விழிகள் ஏராளம்.
மரண ஓலையில்
தூக்கம் கூட தூரமாக நின்ற தருணம்.
கன்னி வெடியில்
காய்ந்து கிடக்கும் நிலங்கள்.ஆயுதம் கொடுத்தது
அகிம்சை மண்!
அநியாயமாக கொன்று
குவித்தது புத்தரின் மண்.!என்ன பாவம் செய்தோம்
சோறு போடும் கழனியில்
கால் வைக்க முடியவில்லை.
படுக்கையிலும் முட்கள்!
வீதியெங்கும் மரண ஓலம்.தண்ணீரும் ரத்தமாக
நிமிடங்கள் யாவும்
என்ன நடக்கும்
என்ன நடக்கும்
பதறி துடித்த ரணங்கள்
வார்த்தையில் சொல்லும் போது
துடியாய் துடிக்கிறது மனது.சொந்த பூமி தாண்டி
ஆடைகள் தேடி ஓடி
அவஸ்தைகள் பலகோடி.அகதி பெயர்
உள்ளுக்குள் வலி!
உறக்கமில்லை இன்னும்
எங்கள் இனத்தின் அழுகுரல்!
ஒவ்வொரு விடியலும்
வேதனைகளின் பிடியில்.பாலகன் எப்படியெல்லாம்
வலியில் துடித்தானோ!
கன்னிகள் என்ன சொல்லி கதறினார்களோ !
முதுமைகள் கெஞ்சியும்
அவள் உடல் தேடிய இரக்கமற்ற நாய்கள்.
அய்யோ இதயம் நொறுங்குகிறது
புத்தனே எங்கே போனாய்
அமைதி தேடியும் நீயும் மறைந்தாயோ!
தினம் தினம் நெருப்பில்
எறிந்த கொடுமை.காக்கை கூட்டங்களின்
துரோக பிடியில் சிக்கி
உதிர்ந்த மலர்கள்
வழியாக விரிகிறது
தமிழனவன் நெஞ்சினிலே.
கண்ணீரும் உதிரமாக.வலி நிறைந்த இனம்
கண்ணீரும் கடலாக
என் கவிதையும் உதிரமாக.முனைவர் சா.சே.ராஜா
மதுரை. 8778723824