நீ நல்லவன் என்று சொல்லப்படும் இடத்தில்
நீ அதிகம் ஏமாற்றப்பட்டு இருக்கிறாய்
அதுவே உண்மை.
நீ ஏமாற்றப்படும் ,அவமானப்படும் நேரத்தில் உள்ளம் உடைந்து போகும் நிலைமை.
உன்மனதை உரம் காணவும் வைக்கிறது.
வாழ்க்கை பிரிவுகளை நினைத்து கவலைப்படதே
என்று ஆயிரம் தத்துவங்கள் உள்ளதே
அனைத்தும் கவலையில் இருந்தே உருவானதே
கவலைப்படு அதுவே வேலையாக போதையாக இருந்துவிடதே
கவலைகள் நல்ல கல்வியை ,கவிதையை தருவதே
எழுந்துவர துணிந்து விட்டால் பாதைகள் தானக அமையுமே
தனிமை இனிமை என சொன்னபோதும்
தவிக்கும் இளமையிடம் கேள் உண்மை தெரியும்
எல்லோரும் இருந்தும் அநாதையாக உணரும்
எதோ இழந்துவிட்ட நினைவைத் தரும்
கண்ணீரும் மௌனமும் உடமையாக போகும்
இங்கே தவறுகள் சரியாகவே செய்யப்படுகிறது
தவறுகள் செய்யும் எவரும் தவறாக உணர்வதில்லை
நியாயத்துக்காக பல காரணம் உருவாக்கப்படுகின்றது
உணரும் போது எதுவும் கையில் இருப்பதில்லை
தாங்களின் முடிவுகளே சரியென உணர்ந்து
பிறரைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை
திறமைகள் மதிக்கப்படுவது உலகில் மறைக்கப்பட்டு விட்டது
அழகும் பணமும் திரன்டு கிடந்தால் உன்னை சுற்றி கூட்டம் இருக்கும்
உன்னைச் சுற்றி கூட்டம் இருந்தால்
உலகம் உன்னை ஏற்றுக்கொள்ளும்
நீ சொல்வதே வேதாமாகும்
உனக்கு வெற்றி தேடி வரும்
உலகம் தரும் புதிய தத்துவம்
இத்தனை தடைகள் இருந்து வாழ வழியிருக்கிறது
அதுவே உன்னில் இருக்கும் நம்பிக்கை
விட்டுவிடதே நீ விழுந்து கிடக்கும் குழிக்கு உள்ளே
மண்ணை கொட்டிவிட கூட்டம் உனக்கு பின்னே
வட்டக்கச்சி
வினோத்