முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஏற்பட்ட மக்களது எதிர்ப்பினைச் சமாளிக்கப் பத்திரிகையாளர்ச் சந்திப்பொன்றை நடாத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உடன்பாடின்மையால் தடைப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் எனது உரையில் அனைத்தையும் தெளிவாக சொல்லிவிட்டதாகத் தெரிவித்த முதலமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பினைத் தவிர்த்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை களத்தில் நின்றிருந்த முன்னாள் கள ஊடகவியலாளர் சிவகரன் விளக்குகையில்:
வழமையோலவே முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாணசபையால் நினைவு நிகழ்வுக்கு என ஒழுங்கு செய்த இடத்தில் பொது மக்களும்,அரசியல்பிரதிநிதிகளும் ஒன்று கூடினர். வழமைக்கு மாறாக இம்முறை தூர இடங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்னர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் எந்தெந்த இடங்களில் இருந்து யார் யார் தலைமையில் பேரூந்துகள் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்படும் என்ற விளம்பரங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. இவ்வாறு தூர இடங்களில் இருந்தும் பேரூந்துகளில் ஒரு தொகை மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்திருந்தனர்.
வழமையாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அந்தப்பகுதியில் இராணுவப்புலனாய்வாளர்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம். அம்முறையும் எந்தக்குறையும் இல்லாமல் அவர்கள் தங்கள் கடமையை செய்து கொண்டிருந்தார்கள். இம்முறை இாணுவப்புலானாய்வாளர்களுடன் STF படைப்பிரிவும் வந்திருந்தது. காலை மணி 9.00 முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருடத்தில் ஒரு முறை மட்டும் வந்து போகும் சொகுசு வாகனங்கள் வந்துகொண்டிருக்கினறன. ஒவ்வொரு வாகனங்களும் வந்ததும் வாகனத்திலிருந்து சொகுசு மனிதர்கள் கீழ் இறங்குவதைப் பார்க்க முடிந்தது.
இவ்வாறு வந்த வாகனங்களின் ஒன்றுக்கு பின்னாலும் அருகிலும் பாதுகாப்பு கடமை செய்யும் பொலிசார் ஓடிவந்துகொண்டிருக்க கறுப்பு நிற அதிசொகுசு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இறங்க அவரை கைத்தாங்கலாக கூட்டிவருகின்றனர் ஏற்பாட்டாளர்கள். கூடவே சுமந்ருதிரனும் வருகிறார். அஞ்சலி நடக்குமிடத்திற்கு சம்பந்தர் வந்ததும் ஐயா வந்திட்டார் தொடங்குவோம் என சில குரல்கள், இல்லலை 9.30 இற்கு இன்னும் 20 நிமிடமிருக்கு என்று சில குரல்கள் வடமாகாண முதலமைச்சர் ஏற்கனவே நினைவிடத்திற்கு வந்துவிட்டார். நினைவிடத்தில் ஏற்கனவே வந்திருந்த முதலமைச்சரை சம்பந்தர் சந்திக்கிறார். ஊடகவியலாளர்கள் எல்லோரும் ஓடியோடி புகைப்படம் எடுக்கிறார்கள். இரு நாட்டுத்தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வது போன்ற காட்சி ஊடகவியலாளருக்கு.
முதலமைச்சரும்,சம்பந்தனும் ஒருவருக்கொருவர் கலோ சொல்லிக்கொள்ளும் அந்த இடைவெளிக்குள் ஐயாவுக்கு கதிரை போடுங்கோ என குரல்கள். உடனடியாகவே கதிரை போடப்படுகிறது. சம்பந்தன் உடகாந்து கொள்ளிறார். பின்னர் இன்னொரு கதிரை கொண்டுவந்து முதலமைச்சருக்குப்போடப்படுகிறது. சம்பந்தருக்கு அருகில் முதலமைச்சர் இருக்கவே அடுத்தடுத்து கதிரைகள் போடப்படுகின்றன விழாவுக்கு வந்திருக்கும் அதிதிகள் வரிசையாக சம்பந்தருக்கு அருகிலிருந்து ஊடகங்களுக்கு காட்சிகொடுக்க முண்டியடித்து கதிரைகளை பிடித்துக்கொள்ளின்றனர்.
இப்போது நேரம் காலை 9.20 அஞ்சலி நிகழ்வுக்கு 10 நிமிடங்கள் இருக்கின்றன. அஞ்சலி நிகழ்வை ஒழுங்கு படுத்துகின்றவர்கள் ஒலிபெருக்கியில் தகவல்களை வழங்கிக்கொண்டிருக்க நேரம் 9.30 ஐ எட்டுகிறது. இப்போது நிகழ்வை ஏற்பாடு செய்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஒலிவாங்கியில் அறிவிப்புக்களை விடுக்கிறார் முதலில் 3 நிமிட மௌன அஞ்சலி( விடுதலைப்புலிகள் ஒரு நிமிட அகவணக்கம் தான் செலுத்துவார்கள்). மௌன அஞ்சலியின் பின்னர் முதலமைச்சரை உரையாற்ற அழைக்கிறார் ரவிகரன். முதலமைச்சர் தனது இருக்கையிலிருந்து எழுந்து உரையாற்ற வருகிறார். முதலமைச்சரின் கால்களைப்பிடித்து சில பெண்கள் கண்ணீர் விட்டவாறு ஐயா சம்பந்தனை கலையுங்கோ அவன் இங்க வேண்டாம், அவன் துரோகி அவனை போகச்சொல்லுங்கோ என்று கண்ணீர்விட்டு அழுகின்றனர். முதலமைச்சரால் அந்தப்பெண்களை சமாதானப்படுத்த முடியவில்லை. ஏற்பாட்டாளர்கள் ஒருவாறு அந்தப்பெண்களை சமாதானப்படுத்தி முதலமைச்சரை உரையாற்றும் இடத்திற்கு அழைத்துவருகின்றனர்.
முதலமைச்சர் உரையாற்றுகிறார். எல்லோரும் முதலமைச்சரின் உரையை அமைதியாக செவிமடுக்கின்றனர். முதலமைச்சர் உரையாற்றி முடிகிறது. வழமையாக முதலமைச்சர் உரையாற்றி முடிந்ததும் முதலமைச்சர் சுடரேற்ற ஏனையோர்கள் சுடரேற்றுவார்கள். இம்முறை முதலமைச்சர் உரையாற்றியதும் ரவிகரன் அறிவித்தல் விடுக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் நம்பந்தன் ஐயா சிறு உரையாற்றுவார். சம்பந்தனை கையில் பிடித்து பேசும் இடத்துக்கு கொண்டுவந்து விடுகின்றார்கள் அவரது பாதுகாப்பாளர்கள். சமபந்தன பேச ஆரம்பிக்கிறார். முதலில் அவர் அங்கு வந்திருப்பவர்களுக்கு வணக்கம் சொல்கிறார். வணக்கத்தில் முதலாவதாக அங்கு வந்திருந்த பௌத்த துறவிக்கு வணக்கம் சொல்கிறார் பின்னர் ஒவ்வொருவருக்காக வணக்கம் சொல்லிவிட்டு பேசத்தொடங்குகிறார்.
சம்பந்தர் பேசத்தொடங்கவே கூட்டத்தில் கிசு கிசுப்புக்கள் தொடங்குகின்றன. ஏற்கனவே சம்பந்தனை வெளியில் அனுப்புங்கள் என முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்து மண்டாடிய கானாமல் போகச்செய்யப்பட்டவர்களின் தாய்மார்கள் சம்பந்தனின் உரையை செவிமடுக்காமல் தமக்குள்ளேயே திட்டத்தொடங்குகின்றனர். ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றனர். சம்பந்தன் பேச்சை தொடர்கிறார். பாராளுமன்ற அரசியல் பற்றிப் பேசுகிறார்.
இப்போது சம்பந்தருக்கு அருகிலிருந்து சம்பந்தனின் உரையை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த முதன்மை ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தனின் பேச்சை இடைமறித்து ஐயா நீங்க தானே பாராளுமன்றத்தில் பய்கரவாதத்தை தேற்கடித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தீர்கள்? என கேள்வி கேட்க அதுவரை தமக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த மக்கள் சம்பந்தன் மீது காரசாரமான வார்த்தைகளை வீசத்தொடங்குகின்றனர் கூட்டத்தில் குழப்பம் எல்லோரும் சம்பந்தன் ஏன் இங்கு வரவேண்டும் என கேள்விகளை கேட்க எங்கும் அல்லோலகல்லோலம். ஏற்பாட்டாளர் சம்பந்தனை தொடர்து பேசச்சொல்லி அழைப்பு விடுக்கிறார். சம்பந்தர் தொடர்ந்து பேசுகிறார். ஆனால் சம்பந்தனின் பேச்சை யாரும் செவிமடுப்பதாக இல்லை. கூட்டத்தில் ஒரே கூச்சல்.
சம்பந்தர் பேச்சை முடித்துக்கொள்கிறார்.இதற்கிடையில் உணர்ச்சிவசப்பட்ட பெண்னொருவர் அந்த இடத்தில் வந்து இந்த இடத்தில் அரசியபேசக்கூடாது என கூச்சலிடுகிறார். அஞ்சலிக்க வந்த மக்கள் அனைவரும் செய்வதறியாது முண்டியடிக்கின்றனர். இந்த இடைவெளிக்குள் முதலமைச்சர் பொதுச்சுடறேற்ற சம்பந்தன்னும் ஏனையோரும் அஞ்சலி செய்கின்றனர். மறுபக்கத்தில் மக்களின் கூச்சல் குழப்பம் தொடர்கிறது. கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், முள்ளிவாய்க்காலில் உறவுகளை தொலைத்தவர்களும் தமது உறவுகளை நினைத்து பெருங்குரலெடுத்து அழுகின்றனர்.
மக்களின் எதிர்பை சமாளிக்க முடியாமல் சம்பந்தர் அந்த இடத்திலிருந்து வெளியேறுகின்றார். கூடவே சுமந்திரன்,மாவை சேனாதிராசா உள்ளிட்டோரும் வெளியேறுகின்றனர்.முதலமைச்சரும் நிகழ்வை முடித்துக்கொண்டு வெளியேறுகிறார். அஞ்சலியிடத்தில் மக்களின் கூச்சல் ஓயவில்லை.சுமந்திரனால் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் அங்கிருந்த பொதுமக்களோடு முறன்படுகின்றனர். மக்கள் ஆத்திரமடைய ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர்.
இதற்கிடையில் முதலமைச்சருக்கு சுமந்திரனால் தூது விடப்படுகிறது.வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் முதலமைச்சரிடம் போய் ஐயா இங்கு நடந்த பிரச்சியை பெரிது படுத்தாமல் மக்களுக்கு விங்கப்படுத்த சமப்ந்தன் ஐயா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை செய்ய விரும்புகிறார். அதில் உங்களையும் கலந்து கொள்வேண்டும் என ஐயா(சம்பந்தன்) விரும்புகிறார் என தூது சொல்ல முதலமைச்சர் இல்லை நான் மக்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் இனி சொல்வதற்கு எதுவுமில்லை எனக்கு நிறைய வேலை இருக்கிறது என் மறுத்துவிட்டு முள்ளிவாய்க்காலிலில் இருந்து புறப்பட்டுச் செல்ல சம்பந்தனுக்கு முதமைச்சரின் செய்தி சொல்லப்படுகிறது.
உடனே சம்பந்தர் முதலமைச்சரின் வாகனத்தை பின் தொடருமாறு தன்னுடைய சாரதிக்கு கட்டளை பிறப்பிக்கிறார். முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்து வீதியில் முதலமைச்சரை சம்பந்தர் வழிமறித்து இருவரும் தமது சொகுசு வாகனங்களில் கண்ணாடிகளை இறக்கிவிட்டு பேசுகின்றனர். அப்போது சம்பந்தன் முதலமைச்சரிடம் ஐயா ஒருக்கால் வாங்கோ பத்திரிகையாளரை சந்திச்சு இந்த குழப்பம் பற்றி கதைப்பம் என்றவுடன் முதலமைச்சர் இல்லையில்லை நான் மக்களுக்கு சொல்லவேண்டியதொல்லாம் சொல்லிட்டன். நீங்களும் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லீட்டிங்கள். இனி என்ன சொல்லக்கிடக்கு. எனக்கு வேலை இருக்கிறது என பேச்சை முடித்துக்கொண்டு முதலமைச்சர் புறப்பட்டுச்சென்று விட்டார்.
இது தான் முள்ளிவாய்க்கால் 2017 நினைவேந்தல் கூச்சல் குழப்பத்தோடு முடிந்த செய்தி.
– சிவகரன்