உயிரெனும் ஊஞ்சலில்
கிளைகள் நின்றாலும்
வேர்வரை ஓர் சரித்திரம்
தாய் போல் நிலைக்கும்.
வாழும் வையகம்
அழகான சரித்திரம்.
அதை ஆளும் தரித்திரம்
மாக்கள் நடைப்பிணம்.
அழகான விருட்சங்கள்
ஊசலாடி மகிழ்கையில்
அரியும் பாமரம் தான்.
இயல்பென்று தேடி
இருப்பை தொலைக்கும்
சுயநல துர்க்கம் தான்.
அரியணை ஏறி
மானுடரை வதை செய்தால்
தர்மத்தில் குற்றமே.
வாயற்ற பூமி
பரந்து கிடக்கும் அரசுகளை
தகித்து நிலைக்கலாம்.
தெருவோடு அனாதைகள்
தேம்பி தகிக்கலாம்.
இன்னும் அனாதையெனும் சுவடி
ஊனுக்குள் வதைக்கலாம்.
மனிதம் பேணா
மாசுள்ள மானுடரால் பார் விம்மி வெடிக்கலாம்.
போர்கொண்டு வாழும்
பொக்கெத்த மானுடரே
அகிலம் கொதிக்கையில்
எரிமலை குழம்பில்
நீங்கள் எல்லாம் பல்லிகள்தான்.
உயிர்ப்புள்ள பசுக்களை
வதை செய்யும் போதே
தோற்ற மானிடர்கள்.
இருப்பை தேடி வதையே
வாழ்க்கையென இனியும் விரைவார்கள்.
சண் ஜீபத்.