பொதுவாக காப்புரிமை என்பது பல வளங்களை முதலீடாக்கி ஆய்வுகள் நடத்தி அதன்விளைவாக கிடைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட வரைமுறையாகும்.இவ்வாறு கண்டுபிடிப்புக்கள் பாதுகாகக்கப்பட்டாலே புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஆய்வுகள் நடத்துவது ஊக்குவிக்கப்படும். இதுவே காப்புரிமை கொடுப்பதன் அடிப்படை நோக்கங்கள்.
ஆனால் உயிரினங்களுக்கு காப்புரிமை வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. 1955இல் போலியோ தடுப்பூசி கண்டு பிடித்த விஞ்ஞனியிடம் அதற்குரிய காப்புரிமை யாருக்கு சொந்தம் என்று கேட்ட போது,’அதற்கான காப்புரிமை ஒருவருக்கும் இல்லை. சூரியனுக்கு காப்புரிமை எடுக்கலாமோ?’ என்று கேட்டாராம். இது 60 ஆண்டுகளுக்கு முன்னர்.
ஆனால் இன்றுஇ மரபணு ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் காப்புரிமைகளாக எடுக்கப்பட்டன. மனிதர்களின் மரபணுக்கள் 24000 உள்ளதாகவும் அவற்றில் 20 வீதத்திற்கு ஐ-அமெரிக்காவில் காப்புரிமைகள் எடுக்கபட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இவ்வாறு காப்புரிமை எடுக்கப்பட்ட சில மரபணுக்கள, புற்றுநோய்இ ஆஸ்துமா போன்றஇ சில வியாதிகளை கொண்டு வருபவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டவை.
இம்மரபணுக்களைஇ அதன் காப்புரிமையை வைத்திருக்கும் கார்பரேட்டின் லைசன்ஸ் இல்லாமல்இ ஆய்வு செய்ய விளையும் எவரும் நீதிமன்றத்திற்கு இழுக்கப்படலாம். யார் இம்மரபணுபற்றிய ஆய்வுகள் செய்யலாம்இ இதை கொண்டு கண்டுபிடிக்கப்படும் நோய்கான தீர்வுகளின் விலை என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் இந்த கார்பரேட் தான் தீர்மானிக்கும்.
2009இல் இதை எதிர்த்து சிலர் போட்ட வழக்கின் பயனாக இப்போது மனித மரபணுக்களுக்கு காப்புரிமை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தாலும் மாற்றங்கள் செய்யப்பட்ட மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
உலகின் தாவர இனங்களுக்கு கார்பரேட்டுகள் எடுத்த காப்புரிமைகள் பல இன்றும் இருக்கின்றன. காலம்காலமாக இயற்கையாக விளைந்து கொண்டிருந்த தாவரங்களை உணவு காப்புரிமை என்ற பெயரில் திருடுதல் மக்களின் அறிவை திருடுவது என்பதற்கு அப்பால் அவை மக்களின் தேவைக்கு பயன்படுத்துவதில் தடைகளையும் விதிக்கிறது.
இங்கே காப்புரிமை என்பது மேலே சொல்லப்பட்ட நோக்கங்களைவிட பெரும் கார்பரேசன்களின் இலாபத்தை பெருக்குவதற்கு கையாளப்படுகிறது என்பதே உண்மை.
மொன்சன்ரோ, டூயூபொன்ட் போன்ற நாடுகடந்த கார்பரேசன்கள் பூர்வகுடி மக்களின் தாவரங்களை திருடி காப்புரிமை பெற்றிருக்கின்றன. இதனால் தாம் காலம் காலமாக உபயோகித்த தாவரங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு இம்மக்கள் தள்ளப்படுகின்றனர். உதாரணமாக பிரேசில் நாட்டில் கிடைக்கபெறும் 55இ000 தாவரவகைகளில் பாதிக்கும் மேலான தாவரங்களுக்கு இக்கார்பரேசன்கள் காப்புரிமை பெற்றிருக்கின்றன.
உயிரியல் தொழில்நுட்பம் உலகின் உணவுப் பிரச்சனைகளை தீர்பதற்காக என்று இந்த ஆய்வுகளை செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இவர்களின் ஆய்வுகளுக்கு கார்பரேசன்கள் தொகையாக நிதிகளை கொடுப்பதால் விஞ்ஞானிகள் இவ்வாறு திசைதிருப்பப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வளரும் நாடுகளுக்கு கார்பரேசன்களின் இத்தகைய திருட்டுக்களால் பெரும் நட்டம் உண்டாகிறது.
ஐ-அமெரிக்காவின் ரைஸ்ரெக் என்னும் கார்பரேசன் மரபணு மாற்றப்பட்ட பசுமதி அரிசிக்கு காப்புரிமை எடுத்து அதை பசுமதி அரிசி என்றே விற்பனை செய்தது. இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னரே இவ்வாறான நான்கு காப்புரிமைகள் வாபாஸ் செய்யப்பட்டன. இப்போதும் ரைஸ்ரெக் இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட பசுமதி அரிசியை ஜஸ்மதிஇ கஸ்மதி போன்ற பெயர்களில் விற்பனை செய்கிறது.
இது போல இன்னும் 100 இந்திய தாவர இனங்கள் ஐ-அமெரிக்காவில் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப் பட்டிருக்கின்றன. இது போலவே ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தாவரங்களிலும் இத்திருடர்கள் கண்வைத்திருக்கிறார்கள்.
மஞ்சள்இ வேம்புஇ பசுமதி அரிசி போன்ற பராம்பரிய தாவரங்களை பற்றிய அறிவை கார்பாரேட்டுக்கள் திருடுவதை நிறுத்தும் நோக்கத்துடன்இ பழைய ஏடுகள் போன்றவற்றில் பல இந்திய மொழிகளில் கிடக்கும்இ ஆயுர்வேதம்இ சித்தவைத்தியம் போன்ற மருத்துவ அறிவை ஆங்கிலம்இ ஜெர்மன் போன்ற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்து இந்திய அரசு வெளியிட்டு வருகிறது.
கார்பரேட்டுகளின் திருட்டு ஐ-அமெரிக்காவில் நீதிமன்றம் வரை போனதை மறந்துவிட்டுஇ கார்பரேட் பேச்சாளர் ஒருவர் ‘இல்லதா பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு தருகிறது’ என்று நக்கலாக பேசியிருக்கிறார்.
கார்பரேட்டுகளின் உணவு திருட்டை பேசும்போது வந்தன-சிவா என்ற இந்திய விஞ்ஞானியை பற்றி பேசாமல் இருக்க முடியாது. 2017 டிசம்பரில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில்இ உணவு திருட்டு செய்யும் மொன்சன்ரோ என்ற கார்பரேட் எவ்வாறு இந்திய விவசாயிகளின் பெரும் தொகையான தற்கொலைகளுக்கு காரணமானது என்பதை விளக்குகிறார்.
இந்தியாவில் விளையும் பருத்தி கொட்டைகளில் 95 வீதம் மொன்சன்ரோ கார்பரேட்டின் விதைகள். விதைகள் ஒரு கார்பரேடின் கட்டுப்பாட்டிற்கு போய்விட்டால், அந்த கார்பரேட் வாழ்க்கையையே கட்டுப்படுத்தும் பலம் கொள்கிறது. முக்கியமாக விவசாயிகளின் வாழ்க்கையை. இதுவே விவசாயிகளின் தற்கொலைகளையும் மொன்சன்ரோவையும் தொடர்பு படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் பல இடங்களிலும். காப்புரிமைகள் ஊடாக விவசாயிகள் பயிர் செய்வதற்கு மொன்சன்ரோ வாடகை வசூலிக்கிறது.
இந்திய அரசுஇ அதன் விதைகள் சார்ந்த சட்டங்களை தளர்த்தி வெளியிலிருந்து விதைகளை இறக்குமதி செய்வதற்கு வழிசெய்ய 1988ம் ஆண்டு உலக வங்கி நிர்ப்பந்தித்தது. இதன் பின்னரே இந்தியாவின் விதைகள் வட்டத்தினுள் மொன்சன்ரோ நுழைந்தது. விவசாயிகள் தாமே உற்பத்தி செய்து வந்த விதைகள்இ இப்போது மொன்சன்ரோவினது காப்புரிமை ஆகியது. விவசாயிகளின் கடன்களும் தற்கொலைகளும் பெருகின.
இதுவும் நவதாராளவாதத்தின் ஒரு வெளிப்பாடுதான்.