கண்ணீர் நினைவில்…!!!
பார்வதி என்றவுடன்
பல நூறு நினைவுகள்
பச்சையரிசிச் சோறும்
பயிற்றங்காய் கறியும்
பன்னீர் வறட்டலும்
பச்சை இலை வறையும்
பாற் சொதியும்
பாகற்காய் வடகமும்
பச்சை மிளகாயும்
பப்படபொரியலும்
பால் தயிரும்
பச்சை மாங்காய் சம்பலும்
பயறுப் பாயசமும்
பண்பாடாய் வாழையிலை
பக்கத்தில் குடிநீர்
பக்குவமாய் எனை இருத்தி
பக்கத்தில் தான் இருந்து
பாச காதல் விழியாள்
பரிமாறிய என்னவள்
படுகொலை சாட்சியாய்
பார்வைகள் இழந்து
பரிதவித்து நிற்கின்றாள்
காதல் கொண்ட என் மனமோ
கழுமரத்தில் சிக்குண்டு
கண்ணீரில் மிதக்கின்றது…
_ நிஜத்தடன் நிலவன்