கிழக்கு மாகணாத்தின் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் ஆடு வளர்க்கும் தமிழ் விவசாயியான அருமைப்பிள்ளை இந்திரன் மற்றும் மாடு வளர்க்கும் விவசாயியான செல்ளையா சரவணை ஆகியவர்களின் குடிசைகள் இனந்தெரியாத நபர்களினால் இந்த வாரம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் முஸ்லீம் இனத்தவர்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நில அகபரிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து அறிந்த அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழ் உணர்வாளர் ஒருவர் இரு விவாசாயிகளுக்கும் நிதி உதவிகளை வழங்கி மீண்டும் அவர்களின் குடிசைகளை அமைப்பதற்கு உதவியுள்ளார்.
முஸ்லீம் மற்றும் சிங்கள வன்முறையாளர்களின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுவரும் கிழக்கு மாகாண விவசாயிகளை காப்பாற்ற தமிழ் மக்களும், அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.