கண்ணீருக்கும் கடல்நீருக்கும்
உப்புத் தன்மையில் மட்டுமல்ல
யாரும் உபயோகிக்க முடியாமல்
உள்ளதும் ஒற்றுமையே
வீணாக சிந்திய கண்ணீரில்
மனப்பாரம் குறைக்கும்
தினமும் தரை தொடும் கடல்நீரில்
கரை சுத்தம் காணும்
உனக்கான தனி உரிமை அழுவது
கடலுக்கான வலிமை அலையடிப்பது
எப்போதும் உரிமைகள் எமக்கானது
தடுக்க யார் வந்தாலும் கடலாய் இரு
வலை வீசினால் வளம் தரும்
கடல் போல
எவர் எதைச் செய்தாலும்
அன்பின் பண்பாக இரு
தன் கோபத்தை அலையாக்கும் கடல் போல
உன் கோபத்தை நிலை மாற்று
அதன் மீது பயணம் செய்
உன் இலக்கு நோக்கி வேகமாக …
வட்டக்கச்சி
வினோத்