தனக்கென
இருக்குமொரு
புதிய புத்தக மணமாக நீ
நுகர்ந்து சென்ற
காதலின்று!
ஒற்றை இலக்கயெண்
பக்கத்தில் பதிவான
இரட்டை இலக்கயெண்
போன்று
புரியாமல்
நீ
புரட்டிய காதலில்,
பழையதொரு
புத்தகக் கடையில்
காலொன்று யெட்டாத
நாற்காலியைத் தாங்கும்
புத்தகமாய்
நின் நினைவுகளும்
புத்தகமொன்றில்
நிரப்பாமல்
இணைக்கப்பட்ட
ஒரு
வெற்றுதாள் போலென்
தனிமைகளும்,
நிரப்பாமல் இருந்த
தாளொன்றில்
நான் நிரப்பிய
யாரோ எழுதிய வரிகளில்
கண்ணீர்த் துளிகள்
மட்டும்
சிரித்துக் கொண்டிருக்கிறது
யெனக்காக…!
- நட்சத்திரா~