ந ம்மவர்கள் இன்னும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதில் வழமை போல் நாம் தனித்துவமான மொழிஇ நிலம்இ வரலாறுஇ பண்பாடுஇ கலாச்சாரைத்தைக் கொண்ட தேசிய இனம் என்பதை தவறாது போடுவர்கள் பாருங்கள்… அதன் அடிப்படையிலான தீர்விற்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம் பேசுவோம் என வேறு இருக்கும் போங்கள்..
பின்னர் வழமைபோல்இ செவ்விக்கு செவ்விஇ சிறுபான்மை இனமான நாங்கள்இ எனத் தவறாது சொல்வார்கள் போங்கள்!!! ஒரு தேசிய இனத்திற்கும் சிறுபான்மை இனத்திற்கும் உள்ள வித்தியாசம் வேறு புரியாதவர்களின் பிதட்டல்களாக அவை மாறும்.
ஒரு தேசிய இனமாக தம்மை அடையாளப்படுத்தும் கனடாவின் கியூபெக் மக்கள் தம் நிலையை எவ்வாறு கனடாவில் தக்க வைக்கின்றனர்?
ஓலன்ட் தீவுகளில் வாழும் சுவீடிஸ் மொழி பேசும் மக்கள்இ பின்லாந்திற்கு உட்பட்டாலும் ஒரு தேசிய இனமாக தங்கள் இருப்பை எவ்வாறு தக்கவைக்கின்றனர்? என்ற புரிதல்களாவது எம் அரசியலாளர்களிடம் உண்டா?
ஆனால் எமது ராஐதந்திரம் என அடிக்கடி கப்சா விடுவதற்கு மட்டும் குறைச்சலில்லை!! இனிமேல் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் யாரிடம் இருந்தும் சிறுபான்மை என்ற வார்ததை வந்தால் உடன் கேட்டுவிடுங்கள்?