இலங்கையின் அமைச்சரவையில் நாளை தினம் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இதன் நிமித்தம் நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதியமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யாருக்கு என்ன அமைச்சுக்கள் ஒதுக்கப்படவுள்ளன என்ற விடயங்கள் இதுவரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்று இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சந்திப்பு ஒன்றை ஜனாதிபதி கூட்டியுள்ளார்.
இதன்போது நாளை நடைபெறவிருக்கும் அமைச்சு மாற்றங்கள் குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் அரசியல் புரட்சிக்கு கொண்டு செல்லும்! புலனாய்வு எச்சரிக்கை
இலங்கையின் அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் நாட்டின் புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கை குறித்து கடந்த வாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சரவை மாற்றம், சிலவேளையில் அரசியல் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று புலனாய்வுபிரிவு எச்சரித்திருந்தது.
இதன்போது அரசாங்கத்தில் உள்ள பலர் மஹிந்த அணியில் இணையலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவை மாற்ற விடயத்தில் பிழையாக வழிநடத்துகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் எண்ணுவதாகவும் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தவிடயங்கள் தொடர்பாக சந்திரிகா, மைத்திரி ரணில் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை இரவு இரகசிய அறைக்குள் இடம்பெற்றுள்ளது.