மாங் கொழுந்து இலயபோல
மேனியழகு கொண்டவளே,
மருதாணி நிழலபோல
ஏ மனசெல்லா பதிஞ்சவளே,
சோப்புக்கட்டி போடயில
என்னயு சேத்துகொஞ்ச கரச்சுவச்ச,
மஞ்சகிழங்க மறந்துபுட்டு
கம்மாஓர தெனதென வந்துபோன,
மட மாறிய தண்ணியா
வந்து நெஞ்சில நிரஞ்சவளே,
மாத்தி நட்ட நாத்தபோல
என்னயு கொஞ்சவாட வச்சவளே,
வயக்காட்டு கரும்பபோல
புல்லுபுல்லா என்ன வெட்டிபோட்ட
எரியவிட்ட கனத்தகரும்பு இனிப்பா
உதடோர ஒட்டிக்கிட்ட,
மழையில
நனஞ்ச பயிரபோல
சொட்டு துளியா
ஒன்ன சுமக்கவச்ச,
கூனு விழுந்தாலு
குச்சிஊனி நடந்தாலு
ஒன்ன இறக்கிவைக்காம
நா சுமக்க,
சேல நானு வாங்கிதாரே
ஜோடிபூவ நாளு கேட்டு,
சொன்ன நாள நானு
பாவக்கொடி போல
நித்தமு சுத்திவாரேன்….!
🖋️நட்சத்திரா~