இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம்விவாதம் நடத்தவேண்டும் என்று அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ் புலம்பெயர்வாளர்அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த விவாதம், மே 31ம் திகதியன்று இடம்பெறும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றைவெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றம், ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் யோசனைகள், முஸ்லிம் விவாக உரிமை மற்றும் பெண்கள் தொடர்பானஉரிமைகள் போன்ற நிபந்தனைகள் அடங்கியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.