ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது குறித்த விடயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்ற அவர் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
அகதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், சிலர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். தற்போது இவர்கள் க்ரீஸ்சிலும், இத்தாலியிலும் தங்கியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தலா 160,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஓர் ஒப்பந்தத்தை 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்திக் கொண்டன.
ஆனால், அகதிகளுக்கு ஐரோப்பாவை நாங்கள் திறந்து வைக்கவில்லை, இதை மெர்கலே செய்துள்ளார்.
இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜேர்மனும், மெர்கலுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் காசியின்ஸ்கி கூறியுள்ளார்.