ஒவ்வொரு மாவீரனும் சிந்திய ரத்தம் இப்பிரதேசத்தில் இளையோடி இருப்பது உண்மை என்றால் எமது மக்களுக்கும் எமது உயிரிழந்த உறவுகளுக்கும் அவர்கள் நேசித்த தமிழ் தேசியத்தையும் சிங்களவர்களுடன் சேர்ந்து அழிக்கப் புறப்பட்ட இருவரையும் இம்முறை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
சுமாந்திரன் சிறீதரனை வெளியே அனுப்புவோம்!
மாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள் உண்மையெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது
யாழ் ஊடக அமையத்தில் 2/8/2020 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 11 வருடங்களுக்கு மேலாக அலைந்து திரிந்தும் போராடியும் மனம் சோர்வடைந்து விரக்தியில் உள்ளோம் எமது இளம் சந்ததியினர் போதை என்ற பெயரில் திட்டமிட்டு அளிக்கப்படுவதும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்கள் சூறையாடப்படுவதும் புதிய விகாரைகள் முளைப்பதும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அலங்கரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து வேடிக்கை பார்த்ததன் விளைவே தமிழ் இனம் அழிவதற்கு காரணமாக இருந்துள்ளது
இந்நிலை தொடர வேண்டுமா அல்லது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா என ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தமிழ் தேசியத்தின் பால் கொள்கையுடைய புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மத்தியில் அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது உரிமைகளை சிங்கள தேசத்திற்கு அடக்கி வைத்ததன் மூலம் வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிப்பதற்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வில் முண்டியடித்துக் கொண்டு தமிழ் மக்களின் காணிகளை தாரை வார்த்துக் கொடுத்தார்கள் தமிழரையும் தமிழையும் கொச்சை படுத்தும் சிங்களவர்களுடன் வாழ்வதை பாக்கியமாக கருதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வக்காளத்து வாங்கும் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் தமிழ் தேசிய அரங்கில் இருந்து தமிழ் மக்கள் தூக்கி எறிய வேண்டும்
ஆகவே தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் எனத் தீர்மாணம் நிறைவேற்றியவர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிவருபவர்களை யும் இம்முறை தேர்தலில் வெற்றிபெற வைக்க வேண்டுமென அவர்கள் மேலும் தெரிவித்தனர் தெரிவித்தனர்