கேள்வி:- தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவமாக கருதுவது ஏன்?
பதில்:- கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தமக்கான அரசு அமைந்து விட்ட தெனப் பூரிப்பில் பௌத்த சிங்களப் பேரினவாதத் தரப்புக்கள் தலையெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. 19-வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கும் 13-வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கும் ஆளும் தரப்பான இராஜபக்ஷ தரப்பினரின் நேரடி, மறைமுகமாகப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது. 19ஆம் திருத்தச் சட்டம் சாதிக்க விளைந்த முக்கியமான இரண்டுவிடயங்கள் ஒன்று – ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல். இரண்டு – சுயாதீனமாகப் பொதுத் தாபனங்கள் மற்றும் நீதித்துறை இயங்குவதற்குரிய ஏற்பாடுகளைக் கொண்டுவருதல். மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.
19 ஆவது திருத்தச் சட்டத்தையும், 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் செய்யவேண்டும். ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவினால் இலங்கை அதிபராக ஒருவர் இருமுறைமட்டுமே இருக்கமுடியும் என்ற விதி நீக்கப்பட்டது. அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் தருவதற்கும் வழிவகை செய்யப்பட்டது 18-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறித்தது. இவை தவிர, மகிந்த ராஜபக்ச அரசால் 18-வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட பலவிடயங்கள் 19-வது திருத்தச்சட்டத்தின் மூலமாக வலுவிழக்கச் செய்யப்பட்டிருந்தது. இன்று ஜனாதிபதிக்கு பக்க பலமாக சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையையும், மகிந்தராஜபக்ச தரப்பினையும் காப்பாற்றுவதே நீண்டகாலத் திட்டமிடலுடன் செயற்பட்டுவரும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஜூலை 27,1987 அன்று இயற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக நவம்பர் 14,1987 அன்று இலங்கைப் பாராளுமன்றம் இயற்றிய 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. இதனை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒப்பந்த ரீதியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. 13-வது திருத்தச் சட்டத்தையும் நீக்குவோம் என்ற பிரச்சாரத்தையும் ஒருபக்கம் இது பௌத்த சிங்கள பேரினவாதிகளை மகிந்தராஜபக்ச தரப்பு. அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க 13வது திருத்தத்தையும் நீர்க்கச் செய்ய இலங்கை அரசு முயற்சித்துவரும் சூழலில் என்றால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதனை கடும் போக்கு வாத சிங்களவர்கள் ஆதரிக்கின்றார்கள். இன்னும் 20, 30 ஆண்டுகளுக்கு இந்தப் பேரினவாத அரசு இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரைவுச் சட்டம் 2002, 2003 காலப்பகுதியில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டபோதும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறவில்லை. அக்காலப் பகுதியிலேயே இச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்குமாயின் தகவலறியும் உரிமைச் சட்டத்தை தெற்காசியாவில் நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இலங்கை உருவாகியிருக்கும். எவ்வாறாயினும் 2015 தேர்தலின் போது இலங்கையில் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்ட பின் 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இலங்கை தகவலறியும் உரிமைச் சட்டம் உலகின் சிறந்த தகவலறியும் உரிமைச் சட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. உலகின் மூன்றாவது சிறந்த தகவலறியும் உரிமைச் சட்டமாக இலங்கைச் சட்டம் கருதப்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை நாம் அதில் பாரிய வெற்றியை அடைந்துள்ளோம் என என்னால் ஆணித்தரமாக கூறமுடியும்.
அதற்கு இந்த தேர்தலை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மாற்றுக் கட்சிகளில் சோரம் போகாத கொள்கைப் பற்று உறுதிகொண்ட கட்சிக்கு வாக்களித்து தமிழர் பிரதி நிதித்துவத்தை பலப் படுத்தவேண்டும். தமிழர்களுக்கு உரிய தீர்வினைப் பெறுவதற்குரிய பலமான அழுத்தம் சர்வதேச தரப்பினாலும், ஐக்கியநாடுகள் சபையிடம் சர்வதேச விசாரணையினைக் கோருவதும், நடைபெற்ற இன அழிப்பிற்கும், நடைபெற்றுவரும் இனக் குறைப்பிற்குமான தீர்வினையும் நோக்கி நகராது இழுத்தடிப்பு செய்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினை
கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது போர்க் குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து அரசாங்கத்துக்கு உதவியது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் தானும் அதனிடம் இருந்து பெற்றுக் கொள்ள மகிந்தராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் சர்வதேச நெருக்கடிகளைத் தொடர்ந்து சமாளிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கட்சி நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்குப் பதிலாக நிபந்தனையற்ற ஆதரவை ஆட்சிபீட அரசிற்கு வழங்கி வருகின்றது. இதற்கு மக்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்டுவதற்கு 2020 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கின்றேன்.
கேள்வி:- அரசியல் தமிழ் தேசியக் கோட் பாட்டின் அடிப்படையில் கடந்த கால தமிழர் தெரிவின் தனிநாடு கோரிக்கை பற்றிக் கூறுங்கள்?
பதில்:- இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமது மொழி, இனம், அடையாளம், தாயகம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்களுடன் பல பேச்சு வார்த்தைகளை நடாத்தி அவைகள் எல்லாம் தோல்வியுற்ற நிலையில் ஈழ வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஒர் இக் கட்டான சிக்கலான சூழ்நிலையை நாம் 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கு திட்டமிட்டவன்முறை, இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இயல்பு நிலையுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை. மக்களின் அபிலாஷைகளைச் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் பழம்பெருந் தமிழ் அரசியல் கட்சிகளையும், முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கான ஒரே மாற்று வழி தனி நாடு தான் என்பதை வட்டுக்கோட்டை பிரகடனத்தில் தந்தைசெல்வா ஊடாக வலியுறுத்தியிருந்தார் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்பதும், அதற்கமைவாகவே தமிழ் மக்களது கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். என தமிழ் தேசியத்துக்காக பாடுபட்ட அரசியல் வாதிகள் ஜோசப் பரராஐசிங்கம், யோகேஸ்வரன், குமார் பொன்னம்பலம் , சிவராம், நடராஜா ரவிராஜ் போன்ற எத்தனையோ அரசியல் வாதிகளை சிங்களப் பௌத்த மேலாதிக்கவாதம், சிங்களபெரும்பான்மை வாதம் மற்றும் சிங்கள அதிரடிப்படையின் துணையோடு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இன்று நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரே நாட்டிற்குள் தீர்வு என்று நாங்கள் நினைக்கின்ற பொழுது சிங்களப் பெரும்பான்மை தான் விரும்பிய விடயத்திற்கு தமிழர் தரப்பை இழுத்துச் செல்கின்றது.
தமிழ் மக்களின் ஒரே குரலாய் மக்களின் அபிலாஷைகளை கூறு போட்டு சரணாகதி அரசியலை 2009ம் ஆண்டும் அதன் பின்னர் உள்ள கடந்து 10 வருடங்களாக தென்னிலங்கையில் உள்ள பேரினவாதிகளின் செயற்படுபாடுகளுக்கு. தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கொள்கை இறையாண்மை எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரம் எல்லாவற்றையும் கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் பிர்திநிதிகள் ‘பதவிகளையும், சலுகைகளையும் கூறுபோட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவ்வனவே செயற்படவில்லை. தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. தமிழ் மக்களினுடைய பிரச்சினையினை தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் ஒன்றைச் சொல்வதும், புதிய அரசுகள் வந்ததும் அரசாங்கத்துக் கேற்ப மாறிக்கொள்வதுமாகவே கடந்த கால தமிழர் தெரிவுத் தலைமைகள் செயற்படுகின்றனர்.
கூட்டமைப்பு காலத்திற்கு காலம் மாறிவரும் பேரினவாத அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாதென்றும் மக்களை அமைதியாக இருக்கும்படியும் கூறிக்கொண்டு அரசாங்கம் கொடுக்கும் சுகபோகங்களைப் பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்கள் என இரண்டு தடவைகாலம் கடந்ததும் இன்று ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதற்கான அவசியம் என்ன? நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்ற நிலையில் கூட்டமைப்பு மக்கள் மைய அரசியலை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியற் சூனியநிலையில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறது. இளைய சமூகத்தை நோக்கிய ஒருமாற்றவேண்டும் இல்லாத நிலையில் அரசியலை நீடித்தால் அதுமக்களின் இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தமிழீழ மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு உறவுகளே சிந்தித்திக்க வேண்டும் ‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை எனக் கருதுகின்றேன்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் உங்கள் பார்வையில் எவ்வாறான தவறுகளை விட்டிருக்கின்றார்கள்?
பதில்:- நீங்கள் கேட்டிருப்பது பெரிய வினா அவர்கள் கடந்த 10 வருடங்களாகச் செய்யத் தவறிய விடயங்களையும் விட்ட தவறுகளையும் பட்டியலிடுவோமாக இருந்தால் காலமோ நேரமோ போதுமானதாக இருக்காது இருப்பினும் சில விடயங்களைக் கூறுகின்றேன். அரசியலில் மக்கள் அரணாக ‘தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2008, 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது சாக்குப்போக்கு அரசியலை முன்னெடுத்தார் திரு இரா.சம்பந்தன் ஐயா செத்து வீழ்ந்த தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளுக்குக் கைகொடுக்கவும் கனடா மற்றும் அமெரிக்கா யுத்த நிறுத்தத்தினை செய்வதற்கு தயாராக இருந்த போதும் எவ்வித நடவடிக்கைகளையும் திரு. இரா.சம்பந்தன் ஐயா மேற்கொள்ளவில்லை. என்பது வெளிப்டையான உண்மை. புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே போர் நிறுத்தம் பற்றி தான் பேச முடியும் என்று சொல்லிவிட்டு வழமைபோல கண்ணை மூடிக்கொண்ட. திரு. இரா.சம்பந்தன் ஐயா கண்திறப்பதற்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
2009பின் கடந்த 10 வருடங்களுக்கு மேல் மேற்கொண்ட சரணாகதி அரசியலில் அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் புறந்தள்ளியது மட்டுமன்றி உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டும் உட்பட்டுவரும் நிலையிலும் தமிழர் வரவாறுகள் இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலையிலும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் ஐயா பேசியதும் அதே ஆட்சிக் காலத்தில் இணைந்து எதிர்க் கட்சித் தலைவராக பதவியை பெற்று வடக்கில் இன அழிப்பு பிரேரணையை கொண்டு வரும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சி முழுமையாக தனது எதிர்ப்பை வெளியிட்டமை.
ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம் என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுபுறத்தில் ஒற்றையாட்சியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என்று கூறியதும். பிரதமரிடம் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிய திரு.இரா.சம்பந்தன் 2016ம் ஆண்டு சம்பூரில் நடைபெற்ற வீதித் திறப்பு விழாவின் போது அரசின் கொள்கையால் நல்லிணக்கம் ஏற்படுகின்றது என்றும் குழப்பங்களை ஏற்படுத்த யாரும் முயலக் கூடாது என்றும் கூறியது எதற்கு?
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தயாராயிருந்தவர்களை வெளியேற்றியமை. தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகளாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், அதில் திழைத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி தமிழ் தேசியத்திற்கு குந்தகமாக செயற்பட்டவர் சுயநல அரசியல் இலாபமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்காத திரு இரா.சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏகப் பிரதிநிதித்துவ அந்தஸ்த்தில் நின்றடியே, தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்குத் 2010இல் தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியது. 2015 ஆம் ஆண்டு வட-கிழக்கு இணைப்பு, சமஷ;டி அமைப்புமுறை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்நிறுத்தி பாராளுமன்றம் சென்றவர்கள் இவை அனைத்தையும் கைவிட்டு ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? ஐ.நா. சபையில் இரண்டு வருடகால நீடிப்பு வழங்க வேண்டும் என்று அரசிற்கு ஆதரவு தெரிவித்தது ஜெனிவா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு தளங்களில் தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுக்காமை.
ஆட்சியாளர்கள் பெருமளவில் பணத்தை வாங்கிய தமிழ் தேசியத் கூட்டமைப்பில் அவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவர் காணாமல் போயிருக்கிறார்களா? கொலை செய்யப்பட்டார்களா? அல்லது பாதிக்கப்பட்டார்களா? சலுகை அரசியலூடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை இலகுவில் விஸ்தரிக்க முடியும் என்பதும் இவற்றை செயற்திட்ட அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சி தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரி நின்றன. தமிழ் மக்களுக்கு விளக்கமற்ற கட்சி பதிவு விடயத்தைத் திட்டமிட்டே திரு இரா. சம்பந்தன். ஓரங்கட்டி வந்தது ஏன்?
வடக்கு, கிழக்கில் நடக்கும் திட்டமிட்ட யுத்தத்தில் வடக்கில் 30 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 30 வருடங்களாக விசாரணைகள் இன்றி சிறையில் இன்று பாருங்கள் வழக்கு முடியாமல் பல கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 6 ஆயிரம் சிறுவர்கள் வடக்கில் சிறுவர் இல்லங்களில் இருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுத்தார்களா? 60ஆயிரத்திற்கும் அதிகமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். 79 கைதிகள் உள்ளனர். இவர்களில், விளக்கமறியல் கைதிகளாக – 35 பேரும், மேன்முறையீட்டு கைதிகளாக – 16 பேரும், தண்டனைக் கைதிகளாக – 26 பேரும், ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதிகளாக – 02 பேரும், என நான்கு வகையினர் அடங்குகின்றனர். இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு, நில அபகரிப்பு, கலாசார சிதைப்பு உள்ளிட்டவை குறித்து சர்வதேச ஊடக நிறுவனங்களும், ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆதாரபூர்வமான அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்ட கூட்டமைப்பினரிடம் இந்த விடயங்கள் குறித்த எவ்வித புள்ளி விபரங்களும், அறிக்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீட்டுத் திட்டமொன்றை 10 வருடங்கள் வகுக்கப்பட நிலை பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்துடனான பரந்த ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மக்கள் நலன் சார் திட்டங்கள் இதுவரை காலமும் உருவாக்கப்படவில்லை.
திரு .இரா.சம்பந்தர் ஐயா, பிரதமர் ரணில் விக்கிர்மசிங்க, பிரிட்டன் பிரதமர் கமரோன் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே இவைகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சலுகை அரசியலும்; தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே இன்றைய தமிழ் மக்களின் அவல நிலைக்கு காரணம். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக சர்வதிகாரத்தனமாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே மேற்கொண்டுவந்திருந்தனர். போருக்கு பிந்திய காலப் பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் மக்கள் அன்றாட வாழ்வாதார தேவைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் போராளிகளின்; வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப தேவையான ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அரச புனர்வாழ்வு திட்டங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கு பொருத்தமான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள திட்டங்கங்களிலோ அல்லது அதற்கான பொறிமுறைகளிலோ அல்லது சிறப்பு உதவி நடவடிக்கைகளிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப்படவில்லை. மாறாக சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அனைத்தும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீது சுமத்தப்பட்டதும், சுமந்திரன் கொலை முயற்சி; செய்ததாக பொய் குற்றம் சாட்டி சந்தேகநபர்களாக நடைபெற்ற கைதுகளுமே புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்ப கொடுத்த மறுவாழ்வு சிறை.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை அதனை இனப்படுகொலையென கூறி சர்வதேசத்திடம் செல்வது மூர்க்கத்தனம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ச்சியாக இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஆட்சி மாற்றத்தின்போது தமிழ் மக்களின் வாக்குகளை முன்வைத்துப் பேரம் பேசுவதற்குக் கிடைத்தது. மைத்திரியா? மஹிந்தவா? என்ற போட்டி வருகையில் இரு தரப்பினருக்குமே தமிழர்களின் வாக்குகள் அவசியப்பட்டன. அதனை இருவரும் வெளிப்படையாகவே கூறினார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித பேரம் பேசலையும் மேற்கொள்ளாது மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இதுபோன்று பல விடயங்கள். பட்டியல் அது நீண்டுகொண்டு செல்லும்.
தமிழீழ விடுதலைப் புலிகளும், மாவீரர் குடும்பங்களும், அல்லது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவரையும், கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாக இருக்கக்கூடிய திரு.இரா.சம்பந்தன் ஐயா மற்றும் திரு. சுமந்திரன், திரு. சிறீதரன் போன்றவர்கள் மிகக் கொடூரமான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த, மாவீரர் குடும்பம், போராளிகள் குடும்பம் உட்பட தமிழ் மக்கள் எந்த வகையில் இவர்களை ஆதரிக்க முடியும்.
கேள்வி:- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எந்தமுறையில் நடைபெறுகின்றது. 2020 ம் ஆண்டிற்கான தேர்தல் களம் பற்றிக் கூறுங்கள்?
பதில்:- இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலானது விகிதா சாரப்பட்டியல் முறையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. 1980 களின் ஆரம்பப் பகுதியில் இருந்து 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களுள் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர்கள் மீதமாக உள்ளவர்கள் 1978 ஆம் ஆண்டுயாப்பின் 14 வதுதிருத்தம் கொண்டு வந்ததன் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட தேசியப் பட்டியல் முறைப்படி 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் . 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்ற 22மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து கொள்வதற்காக ஏழாயிரத்தி நானுற்று ஐம்பத்திரண்டு பேர் (7452) போட்டியிடுகின்றனர். அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்காக 697 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு 80 நிராகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் 617 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் யாப்பின் 96 வது உறுப்புரைக்கு அமைய 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதாவது 25 நிருவாக மாவட்டங்களில் வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 07 வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னித் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 06 விகிதாசார பிரதிநிதித்துவமுறையில் யாரும் தனித்துப் போட்டியிடமுடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்றின் மூலம் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் மூலமே போட்டியிடுகின்றார்கள்.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 05 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 03 ஆயிரத்து 682 பேரும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 03 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 07 ஆயிரத்து 452 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல், 2020 வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 19 அரசியல் கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது இந்தமாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். வன்னி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 17 அரசியல் கட்சிகள் 28 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 16 அரசியல் கட்சிகள் 22 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தமாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இதே போன்றதொரு நிலையே அம்பாறை. திகாமடுல்ல மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 20 அரசியல் கட்சிகள் 34 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
கேள்வி:- வடக்கில் போட்டியிடும் கட்சிகள் எவை ?
பதில்:- இம் முறை என்றுமில்லாதவாறு, இம் முறைத் தேர்தலில் போட்டித் தன்மைகள் விரிந்து நிற்கின்றன. தமிழ் மக்களின் பிரதான கட்சிகளாக 2020 தேர்தலை எதிர் கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்றுகட்சிகள் அங்கம் வகிக்கின்றன), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, (EPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டுத் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி) காணப்படுகின்றது.
இதே போல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி),தமிழர் சமூக ஜனநாயக் கட்சி ( EPRLF வரதர் அணி) ஐக்கியதேசியக் கட்சி (ரணில் அணி), ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இப்படி பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ள அதேவேளை சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக் குழு, வடக்கு வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சுயேச்சைக் குழு, பேரினவாத கட்சிகள் வாக்குகளைச் சிதறடிப்பற்கென இறக்கி விடப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் (ஒட்டுக் குழுக்கள்) பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற செயற்பாடுவதற்காக இப்படிபல அணிகள் களமிறங்கி உள்ளன.
தனிநாட்டிற்காகப் போராடிவந்த தமிழ்த் தேசிய இனம் அதனைக் கைவிட்டு வடக்கு-கிழக்கு இணைந்த தமிழரின் தாயகத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப் படவேண்டும், ஒருதேசிய சிறுபான்மைச் சமூதாயத்தையும், ஜனநாயகத்தை நம்பியமக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகின்ற ஒரு சதி தமிழ் மக்களின் கொள்கைகள் சின்னா பின்னமாக்கப் படவேண்டும், தமிழ் மக்கள் பலமான சக்தியாக இருக்கக் கூடாது, தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் தான் தெற்கில் உள்ளபேரினவாதிகள் விரும்புவது போன்றுவாக்குளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
கேள்வி:- 2020 நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில்:- அனைத்து கட்சிகளும் கட்சியின் விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. உரிமைக்காக போராட்டத்தை ஆரம்பித்த தமிழினம் நோக்கம் இலக்கு செயற்பாடுகள் ஒன்று பட்டாலும் அவர்களின் சொல்லாடலில் கருத்துவேறுபாடுகள் காணப்படுகிறது.
புதிய மாற்றுத் தலைமைகள் என தங்களை அடையாளம் காட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரும் மக்கள் பங்கேற்புடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் களம் இறக்கப்பட்டிருங்கும் வேட்பாளர்கள் இணைந்து குறிப்பாக பெண்கள் பங்கேட்புடன் தயாரிக்கவில்லை என்றால் மிகையாகாது. இவர்கள் மக்களைச் சந்திக்கின்ற போது நேரடியாகவே தாங்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.
பாரம்பரியமாக ஆதரித்து வந்தவர்கள் ஏமாற்றியிருப்பதாக மக்கள் உணரும் நிலையிலும் எல்லாம் செய்யலாம் செய்வோம் எனப் பசப்பு வார்த்தை கூறி தேர்தலில் பகிரங்கமாக தம்மை மீளவும் ஆதரிக்கும்படி கூறி பிரச்சாரம் செய்வதற்கு தயாரிக்கப்பட ஆவணம் தேர்தல் விஞ்ஞாபனம்
மக்களின் அபிலாஷைகளுக்கு மக்கள் பங்கேற்புடன் புதிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்துவதற்காகன மனநிலையில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்பதை தேர்தல் விஞ்ஞாபனம் மிகத் தெளிவாக அதில் ஒழிவு மறைவு ஒன்றுமில்லாத அரசியல் வரலாற்றில் மிகவும் கீழ்த் தரமான தமிழர் தலைவர்களை கொண்டுள்ளோம் என்பற்கு எடுத்துக் காட்டாக தமிழீழக் கொள்கையில் மாற்றமில்லை. தமிழ் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவோம் என காடந்த காலத்தில் கூறி பயணிக்கும் பாதை மாற்றப்பட்ட விடயத்தை எடுத்துரைக்கிறது தேர்தல் விஞ்ஞாபனம். தமது வாக்குறுதிகளை எழுத்துருவில் வாக்கு வேட்டைக்கு கடந்த காலங்களில் பயன்படுத்துவது போன்றே இம்முறையும் தயாரித்துள்ளார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் 2010, 2015 நாடாளுமன்றத்திற்கு தயார் செய்ய விஞ்ஞாபனத்தில் செய்யத் தவறிய விடயங்களை போலியாக மக்களுக்கு இம்முறையும் செய்வதாகக் கூறுவது வேடிக்கை தரும் விடயம் .
மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில கட்சிகளில் தமிழ் தேசிய நீக்க அரசியலும் கடந்த காலத்தில் கொள்ளையடித்து மக்களை சீரழித்து வருகின்றவர்கள் திருடர்கள் என்பது அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் போது கிடைக்கும். ஏமாற்றி நடு வீதியில் விட்ட ஒரு தியாகம் நிறைந்த தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சப்படுத்துவதுடன் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்யும் கட்சிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வடகிழக்கு மக்களை ஏமாற்றி பலவற்றை செய்ததாக பொய் உரைப்பதுடன் மட்டுமல்லாது அதைச் செய்யப் போகின்றோம் இதைச் செய்யப்போகின்றோம் எனக் கூறி இனப் பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருக்கின்றது என்பதற்குரிய ஆதாரம் எழுத்துருவில் உள்ள தேர்தல் விஞ்ஞாபனம் .
இந் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் பொருளாதார அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டு இருப்பதற்குரிய காரணங்களையும் ஆராயாது தயாரிக்கப்பட வில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. கிராமிய அமைப்பு , சங்கங்கள் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்விச் சமூகம் என எந்த அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களே அல்லது தேவைகள் மதிப்பீடுகளே இல்லது தயாரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் விடுதலை அரசியல் மக்கள் ஆற்றுப்படுத்தல் என்பனவற்றின் கூறுகள் உள்வாங்கப்படாத தேர்தல் விஞ்ஞாபனங்களே கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து கொண்டுவந்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம்.
கேள்வி:- தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை இல்லை என்று நீங்கள் கூறும் உள நலம் தொடர்பாக கூறுங்கள் ?
பதில்:- மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இடப்பெயர்வு, இழப்புக்கள், இடைத்தங்கல் முகாம் வாழ்கை என உடல், உள, சமூகப் பாதிப்புகளையும் சொல்லமுடியாத துயரங்களை எதிர்கொண்ட மக்களின் மனக்காயங்கள் ஆறவில்லை இவை ஆற்றப்படவுமில்லை. யுத்த வடுக்கள் எக்காலமும் நீங்கிவிடப் போவதில்லையென்பது ஒருபுறமிருக்க, உளப் பாதிப்பு என்பதுதான் இங்கு பாரதூரமான விடயம்.
யுத்தத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இன்னொரு தலைமுறையினர் யுத்தத்தில் தமது இளமைக் காலத்தைக் கழித்தவர்கள். இதற்கும் மேலாக யுத்தம் காரணமாக உயிர், உடைமை, அவயவங்கள் ஆகியவற்றை இழந்தவர்களும் மிக கொடியது இளமையில் வறுமையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடுமையான மனநலப் பாதிப்புக்களுடன் ஒரு தொகை சிறார்கள் அவதியுறும் போது அதனை அலட்சியப் படுத்தியபடி இருந்துவிட முடியாது. அதீத மன உளைச்சலுக்கு ஆளானவர்களும், மீள முடியாத துயரில் உள்ளவர்களும் என அவர்களின் துன்பங்கள் நீண்டவை…
யுத்தம் ஓய்ந்தாலும் உளவியல் யுத்தம் வடக்கு மக்களை ஆட்கொண்டுள்ளமையும் அவை ஓயாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. யுத்தத்தின் பின்னரான மக்களின் அகிம்சைப் அறப் போராட்டத்தின் போது அரசும் தமிழர் அரசியல் பிரதிநிகளுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்களும் தோல்விகளும் அவர்களை உளவியல் ரீதியாக பலவீனமானவர்களாக மாற்றியிருக்கிறது அவை வாழ்க்கையில் பிடிப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.
உளரீதியாக கடுமையாக பாதிப்படைந்தவர்களாக மக்கள் காணப்படுகின்றார்கள் கடந்த 10 வருடங்களாக எமது சமூகங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் கடந்த காலம் ஏற்படுத்திய மனவடுக்கள் இன்னும் இருந்து கொண்டேயிருக்கின்றன. மக்களின் புனர்வாழ்விலும், மனவடுக்களைக் குணப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள நலனில் அக்கறையிருப்பதாக அப்பணிகளில் எதனையுமே உருப்படியாக வட மாகாண சபையும் மேற்கொள்ளவில்லை.நாடாளுமன்னம் அனுப்பிவைத்தவர்களும் சர்வதேசத்துக்குக் காண்பிக்கும் போலித்தனமான செயல்களிலும், மக்களை வேதனைப்படுத்தும் காரியங்களிலுமே கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது .
நாம் அனுப்பி வைப்பவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பது, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தாது யுத்தப் பாதிப்பும் அதை அனுபவிக்கும் மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் உளப்பிரச்சனைகள் பற்றியோ, வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகளின் தொடர் இறப்பு, தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களின் திடீர் மரணம், அல்லது அரசியல் கைதிகளின் குடும்பத்தின் உள நலம், என்பது குறித்தோ, தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை அவர்களின் உளநலம் பற்றியோ எந்தச் சிந்தனையும் தமிழ் அரசியல் தலைமையிடம் இருக்கவில்லை. யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட இழப்பை பலமாகக் கொண்டு எங்கள் உரிமைகளை வென்றெடுக்க யாரை நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டிய கடமைக்கு மக்கள் வலிந்து தள்ளப்பட்டுள்ளார்கள்
ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியைக் கட்டியெழுப்புவதாயின் இவ்விட யத்தைக் கவனத்தில் கொள்வது முதலில் அவசியமாகும். என்றைக்கு அழுகையும் அச்சமும் இல்லா போக உள ஆற்றுப்படுத்த வழங்கி அவர்களை அவர்களுக்கே உணரச்செய்து அவர்களுக்கு நம்பிகையூட்டுவதன் மூலமே அவர்களை சாதாரண வாழ்க்கை முறைக்கு கொண்டுவர முடியும் அன்றைக்கு நிச்சயமாக, உளஆரோக்கியமான சமத்துவமிக்க ஒரு உலகத்தை காணமுடியும்.
கேள்வி:- நீங்கள் அவளுக்கொரு வாக்கு என்பது பற்றி உங்கள் பார்வை?
பதில்:- பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு பின்னணிகளும், குடும்பம் சமூகம் சூழலும் தாக்கம் செலுத்துகின்றன. தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக குடும்பத்தில் அவர்கள் வகிக்கும் வகிபாகமானது பலதரப்பட்ட வகிபாகங்களைக் கொண்டவள் பலமுகமான பங்களிப்பை தொடர்ச்சியாக செய்து வருபவர் ஆனால் சேவையாற்ற முடிகிறது. மன்னார் மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செரின் சரோர் தலைமையில் பறைசாற்றி வரும் அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் மிக தேவையான ஒன்று இங்கு பெண்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். எவ்வாறு வாக்களிக்க வேண்டும்.
கட்சிகளுக்கு அப்பால் ஆற்றல் ஆளுமையான திறன் ஆணாதிக்க சிந்தனை எல்லைகளை உடைத்து மக்கள் குறிப்பாக பெண் விடுதலையினை நிலைநாட்டும் பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் எம் கரங்களில் உள்ள மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை மட்டும் பெண்களுக்கு வழங்குவதனூடாக பெண் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கான ஏற்பாடாக தெருவெளி நாடகங்ளை மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் நிகழ்த்தி உள்ளனர், இலங்கையில் 52வீதமான பெண்களைக் கொண்ட நாட்டில் 5 வீதம் தான் பங்களிப்புத் தான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கின்றது. பெண்கள் அரசியலிலும் வருவதற்கு 25 வீதக் கோட்டவினை வினைத்திறன் உடையதாக உள்ளூராட்சி சபைகளில் மாகாண சபை, உட்பட நாடாளுமன்றம் என்ற அங்கிகாரத்திற்கு போராடுகின்றார்கள் .
இன்று பல பெண்கள் தேர்தலில் பெண் வேட்பாளர்களாக உள்ளார்கள். இவர்கள் கட்சிகளினால் எதற்கு உள்வாங்கப் பட்டார்கள் என்பதும், தாம் ஏன் அரசியலில் வந்துள்ளோம் என்பதும் தான் இருக்கும் கட்சி ஆணாதிக்கச் சிந்தனை உள்ளதா தாம் எவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பதும் அவர்களுக்குத்தான் தெரியும். இதில் தமிழ்த் தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த பிரதிநிதிகளில் கடந்தகாலங்களில் அரசியலில் இருந்த பெண்கள் என்ன செய்தார்கள் ? பேரினவாத பெரும்பாட்டை தேசியக் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள் தொடர்பிலும் நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள்.
இதில் அவள் என்றாள் யார் என்ற கேள்வி எல்லாம் மனங்களிலும் .தோன்றும் தான் கேள்வியும் என்னிடம் தேர்ந்தெடுக்கின்ற கட்சியில் தமிழ்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய நலன் சார்ந்ததாக முதலில் தெரிவு செய்யுங்கள் அதில் உள்ள பெண் வேட்பாளர் உள்ளார்களா எனப்பாத்து ஒருவரை தெரிவு செய்து அவளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் போட்டபின் மாற்றம் கொண்டுவருவராயின் தெரிவு செய்வீர்கள் என நினைக்கின்றேன் பெண் வேட்பாளருக்கு ஆண்களும் இணைத்து வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் .
வீட்டை நிர்வகிக்க தெரிந்த பெண்கள் நாட்டை நிர்வகிப்பதில் சிறந்தவர்கள் சமூகப் பிரச்சினைகளை இலகுவில் அடையாளம் கண்டு. கொள்ள வேண்டும் வெந்த புண்ணில் வேல் பா ய்ச்சுவது போன்று இல்லாது அரசியல் உரிமையை முழுமையாகப் பெண்கள் பயன்படுத்தவும் தங்களது பிரச்சினைகளை இனம் கண்டு தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையும் பல பாதிப்பைக் கொண்டுள்ள பெண்கள் மென்மேலும் அவர்களிளை பாதிப்பிற்குள்ளாக்கின்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஆரோக்கியமான செயற்திட்டங்களை செயற்படுத்தக் கூடிய மொழி ஆற்றல், ஆளுமை திறன், விடுதலை உணர்வு, சமூகப் பொறுப்பு சோரம் போகா நிலையில் பங்கேற்பதற்கான போதியளவு ஊக்கத்தையும், விழிப்புணர்வையும் உள்ள பெண்னே அவள் .
கேள்வி:- நீங்கள் சொல்வது போல் இலங்கையில் வாக்காளர்களாக பெண்கள் 52 வீதம் காணப்படுகின்ற நிலையில் வட-கிழக்கில் பெண்களும் வேட்பாளர்களாக உள்ளார்கள். இந்த வகையில் வட- கிழக்கில் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் என்ன என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்:- இலங்கையில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 போரின் பின்னான காலப் பகுதியில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் சுமார் தொண்ணூறு ஆயிரம் பெண்கள் வரையில், கணவரை இழந்தவர்களாகவும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவும் காணப்படுகின்றார்கள். இதில் முழு வடக்கிலும் 50,000 அதிகமான வரையிலான பெண்கள் கணவன் மாரை இழந்து யுத்தத்தால் விதவைகளாகியிருப்பதாக சமூகசேவையில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன. அரசாங்க கணக்கெடுப்பும் இவ்வாறே கூறுகின்றது. வடக்கில் மட்டும் பெண்களைக் குடும்பத் தலைவிகளாகக் கொண்ட சனத்தொகை கணிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களத்தின் 2012/13 ஆம் வருடத்திற்கான வீட்டுத்துறையினரின் கணக்கெடுப்பின்படி பெண்களை குடும்பத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களில் 40 – 59 வயதுப் பிரிவிற்கு உட்பட்டவர்களைக் கொண்டதாக இருப்பதோடு அவர்களில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் பெண்தலைமைக் குடும்பங்கள் .
குறிப்பாக யுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட 2015ஆம் ஆண்டின் செயலகப் புள்ளி விபரங்கள்; கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 7,076 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. அதாவது நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 20 வயதுக்குட்பட்ட 34 குடும்பங்களும், 30 வயதுக்குட்பட்ட 526 குடும்பங்களும், 40 வயதுக்குட்பட்ட 1, 124 குடும்பங்களும், 50 வயதுக்குட்பட்ட 1,335 குடும்பங்களும், 60 வயதுக்குட்பட்ட 1,507 குடும்பங்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,550 குடும்பங்களும், எனப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றது இது போன்று வடக்கில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ் மாவட்டங்களில் பலபெண்கள் பாதிக்கப் பட்டிருகின்றார்கள் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் நாளாந்தம் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் கூறுகின்றார்கள்.
பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பின்தங்கிய நிலை, பெண்களுக்கெதிரான வன்முறைகளும், ஒடுக்கு முறைகளும் பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எதிரான பால் நிலை அடிப்படையிலானவன் முறையின் பிரதானவடிவங்களாக உடல் ரீதியான வன்முறை, உணர்வுரீதியான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, பால் ரீதியான வன்முறை, வாய்மொழியிலான வன்முறை, பெண்கள் முகங்கொடுக்கக் கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பொருளாதாரரீதியாக அபகரிக்கும் வன்முறை, தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் தொடர்பானவன்முறை போன்றன அடங்குகின்றன. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க முடியாத நிலையில் தொடர்கதையாகவே இருக்கின்றது.
வடமாகாணத்தில் பெரும் சமூகப் பிரச்சினையாக காணப்படுகின்ற இளவயதுக் கர்ப்பம் தொடர்பான விவகாரம் குறித்து சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு ஆகியன அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களினதும், பெண் பிள்ளைகளினதும் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை மக்கள் முன்வைத்தும் கடந்தகாலங்களில் இவைபற்றிய ஆரோக்கியமான செயற்பாடுகள் காணப்படவில்லை.
இதில் அதிகம் இராணுவ மயப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு விடயங்களில் அதிகரித்த அழுகையும், அச்சமும் சேர்ந்த நிலையில் தான் காணப் படுகின்றார்கள். வடக்கு அதிகாரங்கள் மாகாணசபையிலும் உள்ளூராட்சி சபையிலும் மக்களினால் தேரிவு செய்யப்பட்ட தமிழர்கள் அமைச்சு இருந்தும் அந்த அமைச்சின் பிரதிநிதி கிராமியநகரப் பெண்கள் அமைப்புக்களைச் சந்தித்து தேவைகள் மதிப்பீடே அல்லது பெண்கள் பங்கேற்புச் செயற்பாடுகளை நேர்த்தியாகச் செய்யவில்லை என்பது உண்மை உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் 160 பெண்கள் அமைப்புகள் காணப்படுகிறது. அதன் கூட்டமைப்புக்களின் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் பிரதிநிதி மகாலட்சுமி குருசாந்தன் கூறுகையில் மாகாணசபையில் நாங்கள் அதிகவிருப்பு வாக்குகளைபோட்டு மாகாணசபைக்கு அனுப்பிவைத்த எங்கள் பெண் பிரதிநிதி உட்பட எந்த மாகாணசபையின் பிரதிநிதிகளும் பெண்கள் அமைப்புக்களைச் சந்திக்கவில்லை என மனவருத்தம் தெரிவித்தார்.
நாம் குறைகளை ஆண்களை மட்டும் கூறிவிட முடியாது. ஒருபெண்ணின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சக்தியாக இன்னொரு பெண்ணே இருக்கிறாள் என்பதே உண்மைபெண்களின் பிரச்சனைகளை பேசவேண்டிய இடங்களில் மௌனம் காத்த பெண்களும் அரசியலில் இருக்கின்றார்கள். பெண்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் பல பெண்கள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியபோதும் கண்டுகொள்ளாத தமிழர் பிரதிநிதி என்றுசொல்லிக் கொள்ளும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறையும் தேர்தல் களத்தில் வாக்குவேட்டைக்கு தயாராகத்தான் இருக்கின்றார்கள்.
சர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கான தமது உதவிகளின் போது பெண்கள் பாதுகாப்புக் குறித்து அதிக அக்கறை காட்டவேண்டிய தேவை இருக்கு. அவர்கள் நாளாந்தம் பல உடல் ,உள, சமூக .கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பண்பாடு எனக் கூறியிருக்கும் நிலையில் 2020 நாடாளும் மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் உள்ளிட்டவிடயங்கள் ஆராயப்பட்ட விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருக்கின்றார்கள்.
தேர்தல் விஞ்ஞாபனத்தினைத் தயாரித்தல் தொடர்பாக கிராம சங்கங்கள், அமைப்புக்களுக் கிடையிலான கலந்துரையாடப்பட்டு தயாரிக்கப்படவில்லை குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உங்களது பங்களிப்பு என்ன? என்று வினாவியபோது அதுகட்சித் தலைவர்கள் தயாரித்தது என்றார்கள். மிகவும் வருத்தம் தரும் விடயம் பெண்வேட்பாளர்கள் பலருக்கு தங்கள் கட்சியின் கொள்கை தேர்தல் விஞ்ஞாபனம் எவ்வகையான கூறுகளைக் கொண்டுள்ளது என்பது கூடத் தெரியாதவர்கள்.
ஆனால் பெண்கள் வாழ்வாதாரத்திற்கும், பெண்கள் உரிமைக்கும் குரல் கொடுப்போம் என்கின்றார்கள் தேர்தல் அரசியல் மக்களை, பிரதேச ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக கூறுபோட்டு கட்சிகள் மக்களின் ஒற்றுமையை குழைக்கின்றார்கள் இதில் பலிக்கிடையாக பெண்கள் அவர்களைகுறை கூறி என்ன பயன். அடிப்படையில் கட்சிகள் ஆணாதிக்கச் சிந்தனையுடன் செயற்படுவதும் கட்சிக்குள் இருக்கும் பெண்களுக்கு ஆளுமை இல்லை என்று கூறுவதும் தேர்தலில் அனுதாப வாக்கினை பெறுவதற்காக பெண்களைக் களமிறக்கி இருப்பதும் தமிழரின் விடுதலை பேசும்; கட்சிதான்.
கேள்வி:- தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வடக்கில் பாலியல் தொழில்கள் உருவாகுவதற்குகாரணம் என்று கூறுகின்றார்கள் அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- தமிழ் இனத்தின் எதிர்காலத்தினைப் பாதுகாக்கும் முயற்சியில் செயற்படத் தவறிய மக்கள் பிரதி நிதிகள். கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பெண்கள் விபச்சார விடுதிகள் நோக்கிச் செல்கின்றனர். மிக கவலைக்குரிய கருத்தினை 2014ம் ஆண்டு மாசி மாதம் அளவில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்தார். போரின் பின்பான நிலையில் அவரால் தெரிவிக்கப்பட்ட இக் கருத்து தீவிரமாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் இயங்கி வந்த, பாலியல் தொழிலுக்கான மையம் ஒன்றை, 17.05.2017 அன்று பொலிஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கேயிருந்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பெண்கள் ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார நெருக்கடி என்பது மக்களின் அன்றாட அத்தியாவசியப் உணவுத் தேவைகளை நிவர்த்திசெய்ய முடியாமல் பட்டினியை நோக்கி நகர்த்திச் செல்லும் போது மக்களிடத்தில் நிலவும் வறுமைக்கு பிரதேசத்தில் உள்ள வளங்களை முறையாக பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உணவு உற்பத்தியிலும், தன் நிறைவு சார் விடயங்களிளும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆனால் இவை கவனத்தில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர்கள் வாழ வழியென்ன ? அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கு வேறு வழி என்ன இருக்கின்றது? அப்படி அவர்கள் சமூகம் சும்மா விடுவார்களா? வாழ்ந்தால் அதற்கான ஏற்பாடுகளை யாராவது செய்திருக்கின்றார்களா? அல்லது செய்வார்களா ? இந்தப் பெண்களைப் போல இன்னும் ஏராளமான பெண்கள் தொழில் இல்லாமல், வருமானம் இல்லாமல், வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமென்ன? இவ்வாறான தொழில்களை தணிப்பதற்கு பெண்களுக்கான பொருளாதார, உள ஆற்றுப்படுத்தல், சுகாதார நடவடிக்கைகள் என வடக்குமாகாணசபை தமிழ் இனத்தின் எதிர்காலத்தினைப் பாதுகாக்கும் முயற்சியில் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்கு எவ்வகையான பொறி முறையுடன் கூடிய திட்டங்களைச் செயற்படுத்தினார்கள்? தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் மிகச்சிரமமான வாழ்க்கையோடிருந்தார்கள். தங்களின் உடலை விற்றே வயிற்றை நிரப்பவேண்டியதொரு வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருக்கின்றார்கள் .
மாகாணசபை உள்ளுராட்சிசபைகள் இவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவேண்டும். புலம்பெயர் சமூகத்தின் நிதிப் பங்களிப்புகளைப் பெற்று உற்பத்திசார் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைப் பற்றியும் சிந்தித்து அதற்கான குறுகிய நீண்டகால திட்டங்களை வரைந்து நடைமுறைப்படுத்தியிருக்கலாம் . ஆனால் அவை நடைபெறவில்லை. நிலத்தில் இருந்து புலத்திற்கு வருகை தந்த கடந்தகால தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறன செயற்றிட்டங்களுக்காண செயற்றிட்ட முன்மொழிவுகளுடன் வாந்தார்களா எனப் புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.
போருக்குப் பின்னர் கிளிநொச்சியில் மூன்று கோயில்களுக்கு கோடிக் கணக்காகச் செலவழிக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. பல கோயில்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிபங்களிப்பில் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டது. ஆனால் உட்கட்டுமானத்தில், சமூகக் கட்டுமானச் செயற்பாடுகளில், தமிழ் மக்களின் விடுதலை அரசியலில் பெண்கள் நலன் முன்னெடுக்கும் மக்கள் இயக்கத்தை கட்டியமைத்து மிக அடிப்படையான விடயமாக. பெண்களுக்கான ஆற்றுப்படுத்தலை செய்திருக்கமுடியும் அதைச் செய்யத் தவறியதால் இன்று பெண்களிடம் பலதரப்புக்களும் பாலியல் லஞ்சம் கேட்கும் நிலை. இதனால் பல மன அழுத்தத்திற்கும் தங்களால் எதுவும் ஏலாது என நினைக்கும் நிலைக்குப் பெண்கள் பலர் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
கேள்வி:- எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை வெல்லவைக்கவேண்டும்?
பதில்:- சமகால அரசியல் நிலவரங்களில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்தவேண்டும்; மக்கள் அரசியலாக முன்னெடுக்கவேண்டும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்கின்ற போது தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகிய அடிப்படைகொள்கைகளை தமிழ் மக்களின் நலன்களை நீதிக்கான நியாயத்திற்கான மற்றும் லஞ்ச ஊழல் அற்று குறிப்பாக சிங்கள அரசுக்கும் மகுடிஊதிக் கொள்ளாது ஆளுமையாலும், நேர்மையாலும், நம்பகத்தன்மையினாலும் அறிவாற்றலினாலும் ஈழத்தில் காலகாலமாக நடைபெற்றது ‘இனப்படுகொலை’ ‘போர்க்குற்றம்’ போன்றவற்றைச் சர்வதேச ரீதியாகக் கொண்டுசெல்ல இனத்திற்கு ஒருபுதிய தலைமைத்துவம் தேவை. தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒருதனித்துவமான தேசியம் என்பதை உரக்க உறைக்கச் செல்லும் கட்சியைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
பிரச்சினைகள் யாவற்றிலும் மூலப்பிரச்சினையாக அமைந்த அரசியல் பற்றியவிடயங்கள் வெற்றிடமாக உள்ளது. சிறையில் வாடும் தமிழ் அரசியல்க் கைதிகள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் பற்றி பல்வேறுதரப்பினராலும் பல்வேறுகருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நில ஆக்கிரமிப்பு, சிங்களக்குடியேற்றம், பௌத்தமத சின்னங்களைத் திணித்தல், பிறழ்வான வரலாறுகளைத் திணித்தல் ஆகியவை தொடர்பிலும் காத்திரமான தமிழர் அரசியல் திட்டங்களோ கொள்கை வகுப்புகளோடு செயற்படும் செயற்பாட்டுத் திறன் கொண்ட அரசியல் கட்சியைப் பலப்படுத்த வேண்டியே உள்ளது.
போராளிகள், பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறுவர்கள் ஆதரவற்றகுடும்பங்கள் உடல் உளம் ஆரேக்கிம் ஆகியபிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குமான புனர்வாழ்வை குறுகிய நீண்டகாலத் திட்டமிடலுடன் அறிவு ஆற்றல் ஆளுமையுள்ள உள ஆரோக்கியம் கொண்ட சமூகமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்க்ளுக்கு வாக்குபோடுதல் வேண்டும். பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்க கூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகள் கூறுபவர்களையும் தெரிவுசெய்யவேண்டும் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி:- தமிழ் மக்கள் யாரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கவேண்டும் ?
பதில்:- தமிழ்த் தேசியம், புலி நீக்க அரசியல், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாத கட்சிகளையும் அவற்றைதேர்தல் காலங்களில் உச்சரிக்கும் கட்சிகளையும் அவற்றால் இறக்கப்பட்டுள்ள குழுக்களையும் நிராகரிப்போம் நாம் இவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டையும் தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் இணைந்த வடக்கு,கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இனப் பிரச்சினைக்குத் தீர்வுகா வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையினை பலவீனப்படுத்தி எமது இருப்பினையும் கேள்விக்குள்ளாக்கிவிடும்.
கேள்வி:- 2020 தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களாக நாம் குறிப்பிடுபவர்கள் பற்றி?
பதில்:-
திரு. திருவிஸ்வலிங்கம் மணிவண்ணன் :- தமிழ் தேசியமக்கள் முன்னணிகட்சியில் நம்பிக்கைதரக்கூடியவகையில் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி. கடந்த உள்ளுராட்ச்சிமன்றத் தேர்தலில் யாழ்.மாநகரத்தின் முதல்வர் வேட்பாளர். யாழ்.மாநகரத்தில் கடந்த உள்ளுராட்ச்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுச்சி கொண்டதற்கு இதுவும் ஒருகாரணம் இன்றும் மாநகரசபையிலும், மாநகர மக்களிடத்திலும், நீதிக்கான, நியாயத்திற்கான மற்றும் லஞ்ச ஊழல் அற்றசம்பவங்களின் போதெல்லாம் சரமாரியாக உச்சரிக்கப்படுகின்ற பெயருக்கு சொந்தக்காரர்
நிகரற்ற ஆளுமையாலும், நேர்மையாலும், நம்பகத்தன்மையினாலும், அறிவாற்றலினாலும் இடைக்காலத்தடைபோட்டு மாநகரசபையின் செயற்பாடுகளில் தடைபோட்டவர்களுக்கு கூட பெரும் சவாலாக இம் முறைபாராளுமன்றத்தேர்தலில் மாநகர மக்களின் பெரும்பான்மை ஆதரவைத் தன் செயற்பாடுகளால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இவரின் குரல் நீதியின், நேர்மையின் எளிமையின் குரலாகப் பாராளுமன்றத்திலும் ஒலிக்கும். என நம்பிக்கைதரக் கூடியவகையில் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டவல்லுனர் இவரைமக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும். மக்கள் இவரை பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.
திரு. கந்தையா அருந்தவபாலன்:- தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கடந்த இருமுறைகள் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டவர் முன்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர். புகழ் பூத்தகல்லூரியொன்றின்,முன்னாள் அதிபர், கல்விக்குழு ஆலோசகர், கல்வியாளர், சிந்தனையாளர், தமிழ்த் தேசியத்தையும் மக்கள் விடுதலையினையும் அதிகம் நேசிக்கும் ஒருதேசப்பற்றாளர். தன்னிலை மாறாதமனிதர் யாழ் மாவட்டமக்களுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கு மிக அவசியமானது. பேச்சுவன்மையும் மும்மொழிகளில் பணியாற்றும் ஆற்றலும் உடையவர் குறிப்பாக பின் தங்கியசமூகத்தின் மீது கூடிய அக்கறைகொண்டவர் .
போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு என சமூகவிடுதலைவிரும்பிதமிழர் விடுதலைப் போராட்டம் மீதுதீராப்பற்றுகொண்ட ஆயுதம் தாங்காத போராளி. அதனால் இராணுவத்தின் அச்சுறுத்தல், கைது, சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்தவர் . நாலாம் மாடிச் சிறைக்கம்பிகளுக்குள் வாழ்ந்தவர் இவர், ஒழுக்கமான சிறந்த சிந்தனையாளர் தலைமைத்துவம் கொண்டவர். மாணவர்கள் ,ஆசிரியர்கள் குறிப்பாகக் கல்விச் சமூகத்திலும் மக்கள் மத்தியில் மதிப்புபெற்றவர். கல்விசெயற்பாட்டாளர் மற்றும் வறியமாணவரின் கல்வி வசதிக்காக அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம் ஆரம்பித்து செயற்பட்டுவர் தமிழ் தேசியம் சார்ந்து வலுவான குரலாக ஒலிக்கக்கூடியர் மக்கள் இவரை பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.
திரு. ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்):- திருகோணமலைமாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகப் பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர் 2009 யுத்தம் வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மூத்தபோராளி. இவர் 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக் கொண்டவர்.
24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். விடுதலைப் புலிகளால் 1987 இல் பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் பங்குகொண்டவர். இறுதிவரை தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் பணிகளில் பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய ஒரு தேச விடுதலை விரும்பி ஆளுமையாலும், ஆற்றலும், நேர்மையாலும், தியாகமும் அர்ப்பணிப்பும் நம்பகத்தன்மையும் எளிமையினைக் கொண்டவர். போராளியாய் தலைவரின் சிந்தனையின் செயல் வடிவத்தின் குரலாகப் பாராளுமன்றத்திலும் ஒலிக்கவேண்டும். மக்கள் இவரைப் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.
திரு. எஸ்.தவபாலன் :- இவர் வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்தவர் . பாடசாலைக் கல்வியினை வ/புளியங்குளம் இந்துக்கல்லூரி, வ/கனகராயன் குளம் மகா வித்தியாலயத்தில் கற்று 2006ம் பல்கலைக்கழகம் தெரிவாகிய பின் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரி, 2010ம் ஆண்டு தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது அம்மக்களுக்கான மிகப்பெரிய வேலைத்திட்டத்தை அக்காலத்து பல்கலை ஒன்றியத்தினால் கிழக்கு மாகாணம் சென்று வழிகாட்டலில் மேற்கொண்டவர். 2011ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபோது மாணவர்களை இணைத்து பேரினவாத அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர். அதன் காரணமாக சிறிலங்கா இராணுவத்தாலும் அரச ஒட்டுக்குழுக்களாலும் விசாரனைகளுக்கு அழைக்கப்பட்டு, கடுமையாகதாக்கப்பட்டும் மயிரிழையில் உயிர் தப்பியவர்.
இனவிடுதலைக்காக தாயகத்தில் இடம்பெறுகின்ற சகல போராட்டங்களிலும் கலந்துகொண்டு வருவதுடன் கடந்த எட்டு வருடங்களாக சமூக செயற்பாட்டுத் தளத்திலும், இனத்தின் பண்பாட்டுசார் தளத்திலும், தமிழ்த்தேசியச் சிந்தனையூட்டத்துடன் பயணிக்கின்றவர். இலக்கியத்துறையில் எமது விடுதலைசார் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். இணையப் பத்தி எழுத்துத்துறையிலும் செயற்பட்டுவருகின்ற இளைஞர் கிராம வறுமை ஒழிப்பு மக்களுடன் பங்கேற்பாளர். வெற்றி தோல்விக்கு அப்பால் மக்களுக்காக என்றும் இளைஞரின் குரலாய் ஒலிக்கும் வன்னியில் இளம் வேட்பாளரான இவரை மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள் என நினைக்கின்றேன்.
திருமதி.மேரிறெஜினா சுசீந்திரசிங்கம்:- வன்னிமக்களின் பெரும் அபிமானத்தைவென்று தமிழ்த் தேசிய அரசியல் அறத்தின் வழி பயணிக்கின்றவர் பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். சிறந்த ஆசிரியர் ,கல்வியாளர், சிந்தனையாளர், கல்விச் செயல்பாட்டாளர் மற்றும் வறியமாணவரின் கல்விச் செயற்பாட்டுக்காய் தொடர்ந்து செயட்படுவருபவர் எமது உரிமைகுறித்தும் பெண்களால் பேச ஆளுமையான, கெட்டித்தனமுடைய பேச்சுவன்மையும் மும்மொழிகளில் ஆற்றலும் கொண்டவர். பெண்களை அரசியலானாலும் சரி சமூகவிடயங்களானாலும் சரி துணிந்து கருத்துக்களை முன்வைக்கும் தேசியத்தோடு கூடிய அபிவிருத்தியே தனது இலக்காகக் கொண்டவர். மக்களின் அவலத்தை வெளிப்படுத்துகின்றவர்
எமது மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய பொருளாதாரத்தை, அவர்களது கல்வியை மிகவும் உன்னதமான இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வம்மிக்கவர் பாதிப்படைந்த வன்னித் தேர்தல் தொகுதியில் ஒருபெண் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்ததேர்தலில் போட்டியிடுகின்றர். அபிலாஷைகளையும், உரிமைகளையும் பெற்றிட சகலபெண்களும், பெண்கள் தொடர்பான அமைப்புக்களும் ஒன்றிணைந்து பெண் பிரதிநிதிகளுக்கு தமது வாக்குகளை வழங்கி பெண்களுக்கான யுத்தக் குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு தொடர்பாக நீதி பாதிக்கப்பட்ட இனத்தின் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பெண்ணை பாராளுமன்றம் அனுப்பிவைப்பதன் அவசியத்தினை உணர்ந்த மக்கள் இவரைப் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள். என நினைக்கின்றேன்.
கேள்வி:- வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
பதில்:- வாக்காளர்கள் அனைவரும் தமது வாக்குகளை அளிக்கும் போது முதலில் தான் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டுவது கட்டாயமாகும். பட்டியலில் சின்னத்துக்கு நேரே வாக்களிக்கவேண்டும். இவ் அடிப்படைவாக்கு கட்டாயமானதாகும். அத்தோடு அப் பட்டியலில் தான் விரும்பும் 3 வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கினை அளிக்கலாம், மேலும் அப்பட்டியலில் தான் விருப்புவாக்கினைப் பயன்படுத்துகின்றபோது இலக்கங்களுக்கு மேலே புள்ளடியிட்டுக் காட்டவேண்டும்.
3 விருப்புவாக்குகளும் வாக்குச் சீட்டில் அளிக்கப்படவேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் ஒரு இலக்கத்துக்கு மட்டும் அல்லது இரு இலக்கங்களுக்கு மட்டும் அல்லது மூன்று இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டுக் காட்டலாம். தான் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டாது விருப்பு வாக்குகளுக்குமட்டும் புள்ளடியிடப்படின் அவ் வாக்குகள் நிராகரிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டியல்களின் நேரே புள்ளடியிடப்பட்டிருப்பின் அவ்வாக்கும் நிராகரிக்கப்படும். பட்டியலுக்கு இடும் வாக்கானது கட்சி அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெறுகின்ற ஆசனத்தை தீர்மானிக்கும்.
நாம் இத் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும். நாம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணிச் செயற்படவேண்டும். நடைபெறவுள்ள இவ் நாடாளுமன்ற தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாகப் பயன்படுத்தவேண்டும். எமதும் சமூதாயத்தினதும் உரிமை கருதி செல்லு படியாகக் கூடியவண்ணம் எமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி நாம் வாக்களிப்பது மிகவும் முக்கியமானது.
போட்டியிடும் வேட்பாளர் யார்? அவர் எந்தக் கட்சி சார்ந்தவர் என்பதை நன்கு படித்து இதற்குமுன் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்? அவருக்கு குற்ற பின்னணி இருக்கிறதா? இவரால் எமது தேசத்தது மக்களுக்கு நன்மை இருக்கிறதா? எனத் தெரிந்து அவர்களை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டியது நம் கடமை. இதனை உரியமுறையில் பயன்படுத்தி புதிய அரசியல் அணியினரைத் தேர்ந்தேடுப்பது அனைவருக்கும் பயன்பெறவழி வகுக்கும். ஆகவே அனைவரையும் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன் .
கேள்வி:- நிறைவாக நீங்கள் சொல்ல விரும்புவது ?
பதில்:- தமிழர்களுக்கான அரசியல் தலைமை தற்போது இல்லை என்பதை சர்வதேசமும் சிங்கள அரசும் கூட நன்கு அறியும். நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்று கட்டியெழுப்பப் படவேண்டும். தமிழ் இனம் தனது முடிவுகளை துணிவுடன் எடுக்கூடிய கொள்கை, பற்றுறுதி கொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம். சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து முற்படும் இவ் வேளையில் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் நிலத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து செயற்படவேண்டும். தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் தேவையினை நன்கு உணர்ந்து நாம் பாரிய அரசியல் செயற்பாட்டுக்களைச் செய்வதற்கு முன்னர். ‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது’ தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய சிந்தனைக்கு நாங்கள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
நன்றி.
நேர்கண்டவர் -பா. பார்த்தீபன்
.