இன்று மாலை (04.08.2020) யாழ் ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் தேர்தல் சட்டங்களுக்கமைய விதி மீறல்களான வன்முறைகள் 1101 பதிவாகியுள்ளன. அவற்றில் தமிழரசுக் கட்சி தொடர்பில் 32 வன்முறைகள் பதிவாகியுள்ளதுடன் மாவட்ட இரீதியில் குருநாகல் மாவட்டம் 98 வன்முறைகள் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் முதலாவது மாவட்டமாகவும் உள்ளது.யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 42. முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஸுலை தொடக்கம் ஆகஸ்ட் வரையான பிரச்சார செலவீனங்களில் மொத்தமாக இலங்கையில் 1870 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழரசுக்கட்சி 45 மில்லியன் செலவு செய்துள்ளது. தவிர. அமைதிக்காலமாகிய பிரச்சார ஓய்வுக்காலம் அறிவிக்கப்பட்ட பின் இரகசிய சந்திப்புக்கள் துண்டு பிரசுர விநியோகங்கள்,மறைமுக பத்திரிகை விளம்பரங்களும் இடம்பெற்றுவருவதாக அறியக்கிடைக்கின்றது.இம்முறை மேலதிகமாக சுகாதார நடைமுறை மீறல்களும் பதிவாகியுள்ளன. ஆயினும் கடந்த காலங்களில் 65%வாக்களிப்பு நடந்த போதிலும் இவ்வருடம் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற குறைந்த பட்சம் 70%மேல் வாக்களிப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்றார்.
யாழ்தர்மினி பத்மநாதன்