பொதுவாக சில பெண்களுக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
இதற்கு முக்கிய காரணம் அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அந்தவகையில் முடியின் வெடிப்புக்களை ஒருசில ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். இங்கு முடி வெடிப்பைத் தடுக்கும் சில வழிகள் இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கனிந்த வாழைப்பழம் -1
- முட்டை -1
- தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- தேன் – மூன்று ஸ்பூன்
செய்முறை
ஒரு வாழைப்பழத்தை மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும்.
வேறொரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
கலந்து வைத்த முட்டையில் மசித்து வைத்த வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, கூந்தலின் வேர்கால் முதல் நுனி முடி வரை இந்தக் கலவையைத் தடவி, ஒரு ஷவர் கேப் பயன்படுத்தி தலையை மூடிக் கொள்ளவும்.
ஒரு மணி நேரம் அப்படியே விடவும். பின்பு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
ஒரு வாரத்தில் ஒரு முறை இப்படி செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
முட்டை கூந்தலின் சேதங்களை சரி செய்ய உதவுகிறது. தேங்காய் எண்ணெய், கூந்தலின் வேர்கால்களுக்குள் ஊடுருவி, கூந்தல் முடியை புத்துணர்ச்சி பெறச் செய்து, சேதங்களை சரி செய்ய உதவுகிறது.