இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் இவர் நல்லூரில் ஆலய தரிசனத்திலும், தியாகி திலீபனின் நினைவிடத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டு தனது வாக்கினை கொக்குவில் மேற்கு சி.சி.ரி.எம் பாடசாலை நிலையத்தில் பதிவு செய்து வந்த நிலையில் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் எம்முடைய ஜனநாயக கடமையினை நிறைவு செய்துள்ளோம். வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் என்றார்.
மேலும்.
யாழ்ப்பாண மக்கள் ஆர்வமாகவும் வேகமாகவும் வாக்களித்து வருவதனை அவதானிக்க முடிக்கின்றது.
காலை 7மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் மதியம் 12 வரை
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள்,கர்ப்பிணித் தாய்மார் கள் மற்றும் இளைஞர்களும் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
யாழ்.சென் ஜேம்ஸ் பாடசாலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவரும் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும். வேட்பாளர் திருமதி வாசுகி சுதாகர் யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்திலும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கரவெட்டியிலும் திருமதி அ. ஞானகுணேஸ்வரி வளாலாயிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் தென்மராட்சியிலும் வாக்கினைப் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி