பொதுத் தேர்தலில் 145 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன
தேசிய காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி ஆகியன தலா ஒவ்வோர் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இதேவேளை, 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், 7 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வீதமும் வழங்கப்பட்டுள்ளன.
இறுதி முடிவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 128 + 17 = 145
ஐக்கிய மக்கள் சக்தி – 47 + 7 = 54
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – 9 + 1 = 10
தேசிய மக்கள் சக்தி – 2 + 1 = 3
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2
ஐக்கிய தேசிய கட்சி – 1
தேசிய காங்கிரஸ் – 1
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி – 1
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1
முஸ்லிம் தேசிய கூட்டணி – 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1
எங்கள் மக்கள் சக்தி – 1