முல்லைத்தீவு மாவட்டத்தில் 1257வது நாளைக்கடந்து தமது உறவுகளை தேடி நீதிக்கான போராட்டத்தை நடார்த்திக்கொண்டிருக்கும் இவர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடார்த்தி தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அவர் கூறுகையில்!
நாம் எமது உறவுகளைத்தேடி தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை நடார்த்தி வருகின்றோம் இன்று 1257 நாட்களை கடந்தும் எமக்கான தீர்வினை யாரும் பெற்றுத்தரவில்லை எனவும். தாம் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்ணிட்டு சர்வதேசத்திற்கு தமது நிலையினை எடுத்துக்கூற வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அதற்கு எமது மக்கள் தமக்கான ஆதரவினை தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்கள் இம்முறை ஆட்சியில் இருப்பவர்களின் ஆட்சி நடந்த 2009ம் ஆண்டே தம்மில் பெரும்பாலானவர்கள் தமது உறவுகளை கையளித்தார்கள் எனவும். கையளித்தவர்களை தாம் இன்றும் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஆகவே இம்முறை பாராளுமன்றிற்கு தெரிவாகியிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் தங்களிற்கான ஆதரவினை தந்து தமது நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன்.
தமது நீதிக்கான போராட்டத்தை உலகறியச்செய்த ஊடக நண்பர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்ததுடன், அவர்கள் தமக்கு ஆதரவாக. என்றும் தமது நீதிக்கான போராட்டத்திற்கு தங்களுடன் நின்று தமது போராட்டத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தமது போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள் தமது வியாபார நிலையங்களை மூடி பூரணஆதரவினை தரவேண்டும் எனவும், மதகுருமார்கள், பொது அமைப்புக்கள், மீனவ சங்கங்கள், பொது மக்கள் ஏன யாவரும் தமது நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அத்தோடு புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளும் தத்தமது நாடுகளில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் 30ம் திகதி கவணஈர்ப்பு போராட்டத்தினை நடார்த்தி தமது நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார்