இந்தியாவில் இருந்து றோளர் படகில் 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சளை கொண்டு வந்து இறக்கிய றோளர் படகும் அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து றோளர் படகில் மன்னார் அரிப்பு பகுதியில் கற்பிட்டி மீனவர்களின் படகு மூலம் மஞ்சள் இறக்கும் சமயம் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது றோளரில் இருந்த 4 இந்திய மீனவர்களும் இலங்கையை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருந்தபோதும் றோளரில் இருந்த மஞ்சள் முழுமையாக இறக்கப்பட்டு இலங்கையைச் சேர்ந்த இருவர் மட்டும் கைது செய்யப்பட்டபோதும் கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்கள் 4 பேரும் றோளருடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டது. இதேநேரம் இவர்களின் தகவலின் அடிப்படையில் கற்பிட்டிப் பகுதில் 2 ஆயிரத்து 600 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் மொத்தம் 5 ஆயிரத்து 400 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டதோடு இலங்கையைச் சேர்ந்த இருவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.