முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது,
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச் சிலைக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அமரர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சரவணபவன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.